Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

அட்டகாசமான அம்சங்களுடன்...சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...விலை எவ்ளோ தெரியுமா?

Priyanka Hochumin Updated:
அட்டகாசமான அம்சங்களுடன்...சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்...விலை எவ்ளோ தெரியுமா?Representative Image.

EV ஸ்டார்ட்-அப் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் பெங்களூருவை தளமாகக் கொண்டது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள அதன் சூளகிரி பெசிலிட்டியிலிருந்து சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்த ஸ்கூட்டர் ஆனது மே 23 ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிமுகம் செய்யப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமே, மின்சார இரு சக்கர வாகனங்களில் மிக நீண்ட வரம்பில் ஒரு வாகனத்தை வழங்குவது தான். அதனை இந்த ஸ்கூட்டர் பூர்த்தி செய்யுமா என்பதைப் பாப்போம்.

சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அம்சங்கள்:

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 4.8 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே, ஒரு முறை சார்ஜ் செய்தால் 236 கிமீ வரை நம்மால் செல்ல முடியும். வெறும் 2.7 நொடிகளில் இந்த ஸ்கூட்டர் 0-40 கிமீ வேகத்தை எட்டிவிடும். மேலும் இ-ஸ்கூட்டர் 4.5kW மோட்டாரையும் பயன்படுத்துகிறது. சிம்பிள் ஒன் இ-ஸ்கூட்டரில் முழு எல்இடி லைட், புளூடூத் மற்றும் புளூடூத் இணைப்புடன் கூடிய வைஃபை-இயக்கப்பட்ட வண்ண டிஎஃப்டி டிஸ்ப்ளே போன்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் நான்கு ரைடிங் மோடுகளைப் பெற்றுள்ளது. அவை ஈக்கோ, டேஷ், ரைடு மற்றும் சோனிக் ஆகியவையாகும். சஸ்பென்ஷன் கடமைகளானது, டெலஸ்கோபிக் முன் ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோ ஷாக் மூலம் கையாளப்படும். பிரேக்கிங்கிற்கு, இது இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகளைப் பெறும். எனவே, இரு முனைகளிலும் டிஸ்க் பிரேக்குகள் கிடைக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்