இன்றைய காலகட்டத்தில் உண்மையான மற்றும் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் எவை என்பதை கண்டுபிடிப்பதில் மிக கவனமாக இருக்கவேண்டும். இவற்றில் ஏராளம் போலிஓயானவைகளை வலம் வருகின்றன. இவற்றை வாங்கும் பொது நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் இல்லையென்றால் போலியான ஸ்பேர் பாட்டர்ஸ்களை நமது தலையில் கட்டிவிடுவார்கள். இவை அனைத்தும் உரிய கார் நிறுவனங்களிடம் உரிய அனுமதியின்றி தயாரிக்கப்படுவையாகும். எனவே இவற்றை வாங்குவதில் மிகுந்த கவனம் தேவை.
உண்மையானவையை கண்டுபிடிப்பதில் குழப்பம்:
ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எவை உண்மை எவை போலி என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். காரணம் பொழியும் உண்மையும் ஒரே மாதிரி இருப்பதுதான். ஆனால் போலிகள் உண்மையானவையைவிட விலை மிக குறைவானதாக இருக்கும் எனவே அவற்றை வாங்கும் பொது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும்.
உண்மையான ஸ்பேர்பாட்டர்ஸ்கள் அளவிற்கு போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் வேலை செய்வதில்லை. அவை விரைவில் பழுதடையும் அல்லது காரில் பயணம் செய்வோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்த கூடும். அவை என்னவென்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பாதுகாப்பின்மை:
நீங்கள் வாங்கும் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் உங்கள் பாதுகாப்பில் அச்சுறுத்தல் ஏற்படலாம். குறிப்பாக நீங்கள் வாங்கும் போலியான ப்ரேக்குகள் சரியான நேரத்தில் பயன்படாமல் போகலாம், மேலும் நீங்கள் வாங்கும் அலாய்கள் ஒருமுறை குண்டும் குழியுமான சாலைகளில் போய்வந்தால் கூட அதி ஏதேனும்ம்பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
மேலும் நீங்கள் பயன்படுத்து போலியான எலக்ட்ரிக்கல் ஸ்பேர் பார்ட்ஸ் உங்கள் வாக்கத்தில் ஷார்ட் சர்க்யூட் ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. ஆகவே சற்று விலை குறைவானது என நினைத்துக்கொண்டு போலியான ஸ்பேர் பாட்டர்ஸ்களை வாங்கி நீங்களே உங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டாம்.
சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்பு:
நீங்கள் வாங்கு போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் சாலை விபத்துகளை ஏற்பட வழி வகுக்கும். மேலும் இந்தியாவில் நடைபெறும் 10-ல் 2 வாகன விபத்துகள் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் மூலமே நடக்கின்றன என பபுள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீங்கள் வாங்கும் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் சரியாக வேலை செய்யாத பொது நீங்கள் மிக பயங்கரமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இன்ஜின் செயல்திறன் குறைய வாய்ப்பு:
நீங்கள் பயன்படுத்தும் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்கள் உங்கள் வாகனத்தின் இன்ஜின் செயல்திறனை குறைக்க வாய்ப்புகள் அதிகம். இதனால் அதிகமான மாசு உமிழ்வு ஏற்பட்டு சுற்றுசூழல் பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
அடிக்கடி ரிப்பேர்:
நீங்கள் போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கிவிட்டதால் அதிக பணத்தை மிச்சம் பிடித்துவிட்டதாக நினைப்பீர்கள். அதுதான் இல்லை நீங்கள் ஒரு முறை உண்மையான ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்குவதை காட்டிலும் இது அதிகமான செலவையே உங்களுக்கு ஏற்படுத்தும். அம்மா இவை அடிக்கடி ரிப்பேர் ஆகும் அதனை பராமரிப்பதற்கு ஆகும் செலவுடன் ஒப்பிடும்போது நீங்கள் விலை அதிகமான உண்மையான ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்குவதே சிறந்தது.
வாரண்டியில் பாதிப்பு ஏற்படும்:
புதிய கார் வாங்கும் பொது அதற்கு அந்த நிறுவனங்கள் வாரண்டி வழங்கும் அதனை உரிய முரையில் பயன்படுத்தி கொள்ளவேண்டும். ஆனால் அதனை மீறி உங்கள் வாகனங்களுக்கு போலியான ஸ்பேர் ஸ்பார்ட்ஸ்களை பொருத்துவதன் மூலம் அந்த வாரண்டியில் பாதிப்புகள் ஏற்பட கூடும்.
உங்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து:
போலியான ஸ்பேர் பார்ட்ஸ்களை பயன்படும் உங்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து உளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கும் போலியான ப்ரேக் உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்களுக்கு எதிரே வரும் வாக ஒட்டிக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…