இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்றான டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), மாருதி சுஸுகி பலேனோ, ஹுண்டாய் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்ஸா போன்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களுடன் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்ஸா ஆகிய கார்களில் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், டாடா அல்ட்ராஸ் காரில், டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் மட்டுமே இருக்கிறது.
எனவே தான் அல்ட்ராஸ் காரின் சிஎன்ஜி மாடலை அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்து, இதற்கான பணிகளில் மும்பரம் காட்டிவந்தது. அதனடிப்படையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ என்ற வாகன கண்காட்சியில் டாடா நிறுவனம் தரப்பில், டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG) மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அல்ட்ராஸ் சிஎன்ஜி மாடலை இந்தியா முழுவதும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்து, கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ரூ.21,000 என்ற டோக்கன் தொகைக்கு முன்பதிவு செய்யத் தொடங்கியது. இந்த Altroz CNG ஆனது XE, XM+, XM+ (S), XZ, XZ+ (S) மற்றும் XZ+ O (S) என்ற ஆறு வகைகளில் கிடைக்கிறது. மேலும், அறிமுக விலையாக ரூ. 7.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க | டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி காரின் அம்சம் மற்றும் மைலேஜ்
Altroz CNGயின் மாறுபாடு வாரியான எக்ஸ்-ஷோரூம் விலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
மாறுபாடுகள் (Variants) |
எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) |
எக்ஸ்இ (XE) |
ரூ. 7.55 லட்சம் |
எக்ஸ்எம்+ (XM+) |
ரூ. 8.40 லட்சம் |
எக்ஸ்எம்+ எஸ் (XM+ (S)) |
ரூ. 8.85 லட்சம் |
எக்ஸ்இசட் (XZ) |
ரூ. 9.53 லட்சம் |
எக்ஸ்இசட்+ எஸ் (XZ+ (S)) |
ரூ. 10.03 லட்சம் |
எக்ஸ்இசட்+ ஓஎஸ் (XZ+O(S)) |
ரூ. 10.55 லட்சம் |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…