உலகம் முழுவதும் இன்சூரன்ஸ் என்பது சாதாரணமான விஷயம் தான். நம் நாட்டில் நாம் அதிகமாக செய்யும் இன்சூரன்ஸ் எதுவென்றால் வாகனம் இன்சூரன்ஸ் ஆகும். இந்த வாகன இன்சூரன்ஸில் 3rd பார்டி இன்சூரன்ஸில் என்னென்ன கவர் ஆகும் என்பது பல முறை குழப்பமாக இருக்கும். இந்த குழப்பத்திற்கான தீர்வை எப்படி அறிந்து கொள்வது என்பதை பற்றி காண்போம்.
வாகன இன்சூரன்ஸ் என்பது எல்லா நாட்டிலும் கட்டாயம் ஆகும். இந்தியாவில் நாம் குறைந்த பட்சமாக 3rd பார்ட்டி இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும். இந்திய மோட்டார் வாகன சட்டம் 1988 அடிப்படையில் 3rd பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டாயம் ஆகும். இந்த 3rd பார்ட்டி இன்சூரன்ஸ் குறைந்த அளவு பிரிமியம் என்பதால் பெரும்பாலான நபர்கள் இதை தான் பயன்படுத்துகிறோம்.
இந்த 3rd பார்டி இன்சூரன்ஸ் போடுவதால் நம் வாகனம் விபத்தில் சிக்கினால் நமக்கு இன்சூரன்ஸ் கவர் ஆகாது. 3rd பார்டி இன்சூரன்ஸில் விபத்தில் சிக்கி காயமாகும் நபர்களுக்கு அல்லது உயிரிழப்பு தான் சேரும். விபத்தில் மூன்றாவது நபருக்கு பொருள் இழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் அதிகபட்சமாக இருக்கும் ரு 7.5 லட்சம் வரை கிளைம் செய்யலாம்.
ஒருவேளை விபத்தில் வாகனத்தின் உரிமையாளருக்கு பொருள் இழப்பு, காயம், உயிரிழப்பு போன்ற ஏற்பட்டால் இன்சூரன்ஸ் கிளைம் பண்ண முடியுமா..? என்ற குழப்பம் உதிக்கும். ஆம், 3rd பார்ட்டி இன்சூரன்ஸ் போட்டிருந்தால் விபத்தில் நமக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு நாமே பொறுப்பாகும், இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது.
எனவே, நாம் கார் வைத்திருக்கிறோம் என்றால் காம்பிஹென்ஸிவ் இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நல்லது. இந்த இன்சூரன்ஸ் பிரிமியம் அதிகம் என்றாலும் விபத்துக்கான நஷ்ட இடை நமக்கு சரியாக அளிக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…