பிரபல ஜப்பான் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா தனது புதிய யாரிஸ் கிராஸ் எஸ்யூவியை இந்தோனேசியாவில் வெளியிட்டுள்ளது. முதலில் அந்த நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த கார் படிப்படியாக மற்ற ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த புதிய யாரிஸ் கிராஸ் எஸ்யூவியானது, ஐரோப்பாவில் விற்கப்படும் Yaris Cross பதிப்புடன் ஒப்பிடுகையில் முற்றிலும் மாறுப்பட்டது.
டொயோட்டா யாரிஸ் செடானுடன் தனது பெயரை பகிர்ந்து கொள்ளும் இந்த யாரிஸ் கிராஸ் எஸ்யூவி இந்தோனேசியாவில் விற்பனையாகும் ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. இந்த புதிய டொயோட்டா யாரிஸ் கிராஸ் காரில் ஆசியான் நாடுகளில் உள்ள Yaris செடான், Avanza MPV மற்றும் Raize SUV உள்ளிட்ட மாடல்களில் பயன்படுத்தப்படும் டிஎன்ஜிஏ இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், யாரிஸ் கிராஸ் 4,310 மிமீ நீளம் கொண்டது, இது க்ரெட்டாவை விட சற்று நீளமானது. இது 2,620 மிமீ வீல்பேஸைப் பெறுகிறது, இது க்ரெட்டாவை விட 10 மிமீ நீளமானது. 1,770 மிமீ அகலத்தையும், 1,615 மிமீ உயரத்தையும் கொண்டது.
வெளிப்புற மற்றும் உட்புற ஸ்டைலிங்:
டொயோட்டா தனது E60 5-சீரிஸில் BMW செய்ததைப் போன்றே, யாரிஸ் கிராஸுக்கு ட்ரேபீசியம் வடிவ கிரில், கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் இரு முனைகளிலும் ஸ்கிட் பிளேட் ஆகியவற்றை வழங்கியுள்ளது. பின்புறத்தில், யாரிஸ் கிராஸ் ஒரு கோணத் தோற்றத்தைக் கொண்டுள்ளது, மேலும் கூர்மையான தோற்றத்துடன் கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ள டெயில்-லேம்ப்கள் மற்றும் ஒரு தட்டையான டெயில்கேட் உள்ளது. யாரிஸ் கிராஸின் ஒட்டுமொத்த தோற்றம், குறிப்பாக பின்புறம், வெளிநாட்டில் விற்கப்படும் கொரோலா கிராஸ் SUV போன்றே உள்ளது.
இது முழுக்க முழுக்க கருப்பு தீம் மற்றும் டாஷ்போர்டில் ஓடும் மெல்லிய நீல நிற பட்டையுடன் கூடிய எளிய மற்றும் நடைமுறை வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது லெதரெட் இருக்கைகளைப் பெறுகிறது, இது கேபினின் பிரீமியம் அளவைக் கூட்டுகிறது. மற்ற ஸ்டைலிங் பிட்களில் ஸ்கொயர்-ஆஃப் வீல் ஆர்ச்கள், டயமண்ட்-கட் அலாய் வீல்கள் ஆகியவை அடங்கும்.
அம்சங்கள்:
அம்சங்களைப் பொறுத்தவரை, SUV ஆனது 10.1-இன்ச் ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, பனோரமிக் சன்ரூஃப், பல அடுக்கு டேஷ்போர்டு, முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், சென்டர் கன்சோல், சரிசெய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, இந்த யாரிஸ் கிராஸில் ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்ட் செயல்பாடு கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், ரியர் கிராஸ் டிராஃபிக் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பவர்டிரெய்ன் விருப்பங்கள்:
இந்த மாடல் பெட்ரோல்-மட்டும் மற்றும் பெட்ரோல்-ஹைப்ரிட் என இரண்டு விருப்பங்களில் வருகிறது. அந்தவகையில், 1.5 லிட்டர் 2NR-VE, 4-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 104 hp பவரையும், 138 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேப்போல், 1.5 லிட்டர் 4-சிலிண்டர் ஹைப்ரிட் மின்சார மோட்டார் இ-சிவிடி கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 79 hp பவரையும் மற்றும் 141Nm முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…