பைக்கில் டிராவல் செய்வது பலருக்கு பிடிக்கும். ஆனால் வழக்கமாக நாம் பயன்படுத்தும் பைக்கள் லாங் டிராவலுக்கு ஏற்றதாக இருக்காது. Triumph Sprint GT பைக் லாங் டிராவிலிங் பிரியர்களுக்கு ஆகவே உருவானது ஆகும். இந்த Triumph Sprint GT பைக்கின் விலை எவ்வளவு... பர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கும்... போன்ற கேள்விக்கு இந்த பதிவு பதிலாக அமையும்.
2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ள Triumph Sprint GT பைக் 3 சிலிண்டர் கொண்ட 1050 cc பைக் ஆகும். பெட்ரோல் இன்ஜின் கொண்ட இந்த பைக் டூரிங் பைக்காக செயல்படும். Triumph Sprint GT பைக் 128 Bhp பவரை 108 Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
எலக்ட்ரிக் ஸ்டார்ட், பிள்ளியன் ஃபூட்ரெஸ்ட் போன்ற வ்சதிகள் வண்டி ஓடும்போது மிகவும் வசதியான டிராவல் அனுபவம் அளிக்கும். 3 சிலிண்டர்வ் பைக் என்பதால் நீண்ட பயன்பாட்டில் சிறப்பான பர்ஃபாமன்ஸ் அளிக்கும். 2260 mm நீளமும் 760 mm அகலும் கையாள வசதியாக இருக்கும். 1210 mm உயரம் அனைத்து தரப்பினருக்கும் ஓட்டும் வகையில் அமைந்துள்ளது.
6 ஸ்பீடு கியர் கொண்ட Triumph Sprint GT பைக்கிற்கு wet, multiplate clutch இருப்பது பாதுகாப்பான கியர் டெர்ன்மிஷ்ன் கொடுக்கும். மேலும் இதன் ஃபிரண்டு மற்றும் ரியர் சஸ்பென்ஷன் நமக்கு கிரிப்பான பிரேக் பயன்பாடு கொடுக்கும். குறிப்பாக இதன் பேட்டரி நமக்கு மெயிண்டனஸ் பிரியாக இருப்பது டிராவிலில் அதிகம் பயன்படுவதாக இருக்கும்.
ராயல் லுக்கில் இரண்டு நிறங்களில் (Pacific Blue, Aluminium Silver) கிடைக்கும் இதன் விலை 9.50 லட்சம் ஆக இருக்குமாம். 20 லிட்டர் டேங்க் கெபாசிட்டி கொண்ட Triumph Sprint GT அதிகபட்சமாக 160 km வேகம் செல்லும். லாங் டிராவலுக்கு என பிரேத்தியமாக உருவாகிய இந்த பைக் 20 லிட்டர் முழு டேங்கில் 320 km செல்லும் என நம்பப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…