யூடியூபில் பிரபலமாகி தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்று சாதித்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அந்த வகையில் பைக் ரசிகர்களுக்கு புதிதாக வெளியாகும் பைக் மற்றும் அதன் சிறப்பம்சங்களை வீடியோவாகப் பதிவிட்டு அதிக அளவிலான சப்ஸ்கிரைபர்ஸ்களை யூடியூப் பக்கத்தில் கொண்டுள்ளார்.
டிடிஎஃப் வாழ்க்கை வரலாறு (Ttf biography in tamil)
1999 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் TTF வாசன் பிறந்தார். இவர் பிரபலமான இந்திய யூடியூபர் ஆவார். இவர், சமூக ஊடகங்களில் வீடியோக்களைப் பதிவிடுவதில் அதிக கவனம் செலுத்துவார். மேலும், TTF வாசன் கோயம்புத்தூரைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் ரைடர் ஆவார். டிடிஎஃப் வாசன் மில்லியன் கணக்கிலான சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளார். மேலும், இவர் தனது பைக் சவாரி சாகசங்களை மக்களுக்குத் தெரிவிப்பார்.
பிரபலமான யூடியூபரான டிடிஎஃப் வாசனின் தந்தை மற்றும் தாயார் பெயர் தெரியவில்லை. மேலும், உடன்பிறப்பு குறித்த தகவலும் தெரியவில்லை. இவர் திருமணமாகாதவர். மேலும், இவர் தனது காதலி குறித்து எந்த சமூக வலைத் தளங்களிலும் வெளியிட்டதில்லை.
இந்நிலையில் டிடிஎஃப் வாசன், டிடிஎஃப் ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
டிடிஎஃப் ஆட்டோமொபைல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், மே 8 ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்ட பட்டியலிடப்படாத தனியார் நிறுவனம் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள இந்நிறுவனம் சுமார் 1 லட்சத்தை பங்கு மூலதனமாகவும், ரூ.1 லட்சம் செலுத்தப்பட்ட மூலதனமாகவும் கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் அப்துல்லாஜீஸ்காதர் மொஹிதீன் மற்றும் வைகுந்தவாசன் வெங்கடாசலம் ஆவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…