கடந்த பிப்ரவரி 1, 2023 அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் நாட்டின் நன்மைக்காக பல திட்டங்கள் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று தான் பெண்களுக்கான “மஹிளா சம்மன் பச்சத் பத்ரா” என்னும் திட்டம். இத்திட்டம் பணியில் இருக்கும் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள், கிராமப்புறப் பெண்கள் என்று அனைவருக்கும் வருமானத்தை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வைப்புத்தொகையாக ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம், அதற்கான வட்டி விகிதம் 7.5% ஆகும். மொத்தம் இரண்டு வருட திட்டம் என்பதால் வரும் மார்ச் 2025 வரை இந்த திட்டம் செயல்படும்.
குடும்பத்தைப் பொறுத்த வரை உழைப்பது யார் வேண்டுமாக இருக்கலாம் ஆனால் சேமிப்பதோ அந்தக் குடும்பத்தின் பெண்ணாக தான் இருப்பார்கள். ஏனெனில் அப்போது தான் குடும்பத்திற்கு பணம் தேவைப்படும் காலங்களில் அந்த சேமிப்பு அவர்களுக்கு கைக்கொடுக்கும். மேலும் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் இருக்கும் மொத்தமக்கள் தொகையில் 67.7% பெண்கள் மற்றும் குழந்தைகளே உள்ளனர்.
எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் இத்திட்டம் நிறைய பலன்களை அளிக்கும். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் சம்பாத்தியம் அவர்களின் குடும்பத்திற்கு மட்டும் இல்லாது நாட்டின் பொருளாதாரத்திற்கும் நன்மை தரும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக, கிராமப்புற பெண்களுக்கு உதவிக்கரம் தரும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வந்த தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) வெற்றியை சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது என்பதைப் பற்றி முழுவதுமாக
தெரிந்துக் கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றவும்.
நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள தபால் நிலைத்திற்கு சென்று இத்திட்டம் பற்றிய தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதற்கு பின்பு, விண்ணப்பம் வாங்குதல் - இத்திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்ப படிவத்தை வாங்கி, அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கொடுக்கவும்.
ஆதார ஆவணங்களின் நகல் சமர்ப்பிக்கவும் - விண்ணப்பம் முழுவதுமாக நிரப்பிய பின், உங்களுடைய முகவரி, அடையாளச் சான்றிதழ் மற்றும் தேவைப்படும் மற்ற ஆதார ஆவணங்களின் நகலை தரவும். வைப்புத்தொகை செலுத்துதல் - உங்களால் முடிந்த தொகையை வைப்புத்தொகையாக செலுத்தலாம். அதனை பணமாகவோ அல்லது காசோலையாகவோ நீங்கள் தரலாம்.
பதிவு சான்றுதல் பெறுதல் - டெபாசிட் தொகை கட்டிய பின்னர் நீங்கள் மஹிளா சம்மன் பச்சத் யோஜனா திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழைப் பெற்று உறுப்பினராக மாறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…