Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மிக மிக குறைந்த முதலீட்டில் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க உதவும் 5 வழிகள்!

KANIMOZHI Updated:
மிக மிக குறைந்த முதலீட்டில் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க உதவும் 5 வழிகள்! Representative Image.

பஞ்சதந்திரம் படத்தில் வரும் “சின்ன கல்லு பெத்த லாபம்” டைலாக்கைப் போல் மிகக்குறைந்த முதலீட்டில் சம்பாதிக்கும் ஆசை நாம் அனைவருக்கும் இருக்கும். கொஞ்சம் யோசனையும், ரிஸ்க் எடுக்கும் தைரியமும் இருந்தால் போதும் மிகக்குறைவான முதலீட்டில் ஒரு தொழிலை ஆரம்பித்து, வேலை பார்த்துக்கொண்டே எக்ஸ்ட்ரா வருமானமும் பார்க்கலாம். அப்படி குறைந்த முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்க உதவும் 5 வழிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்... 

கிளாஸ் எடுங்க காசை அள்ளுங்க:

 

மிக மிக குறைந்த முதலீட்டில் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க உதவும் 5 வழிகள்! Representative Image


ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான திறன்கள் இருக்கும் சிலர் நன்றாக பாட்டு பாடுவார்கள். கிட்டார், பியானோ போன்ற இசைக்கருவிகளை வாசிப்பார்கள், பிரெஞ்சு, சீனா, கொரியா, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்களாக இருப்பார்கள். தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங், சோசியல் மீடியாவில் பாலோயர்களை உயர்த்துவது, புதிதாக பிசினஸ் தொடங்குவதற்கான ஆலோசனைகளை தருவது என ஏராளமான வாய்ப்புகள் ஆன்லைன் மூலம் செய்ய காத்திருக்கிறது. அதில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்து நேரிலோ அல்லது ஆன்லைனிலோ வகுப்பு அல்லது ஆலோசனை வழங்கி பணம் சம்பாதிக்கலாம். 

 

அறை (அ) வீட்டை வாடகைக்கு விடுவது:

மிக மிக குறைந்த முதலீட்டில் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க உதவும் 5 வழிகள்! Representative Image

உங்கள் வீட்டில் யாருமே பயன்படுத்தாத அறை இருக்கிறதா? அதனை நீங்கள் சுற்றுலா பயணிகள் அல்லது வேலை விஷயமாக வருவோருக்கு வாடகைக்கு விடலாம். இதற்காக பல ஆன்லைன் தளங்கள் இருக்கின்றன. உங்கள் வீட்டை அல்லது அறையை வாடகைக்கு விட நினைத்தால் அதனை நன்றாக அலங்கரித்து சில போட்டோக்களை அந்த ஆன்லைன் தளங்களில் பதிவிட்டாலே போதும் வாடகைக்கு வேண்டும் என பலரும் உங்களை தொடர்பு கொள்வார்கள். இதன் மூலமாக மாதம் கணிசமான தொகை உங்களுக்கு கிடைக்கும், 

 

பங்குச்சந்தை முதலீடுகள்: 

 

மிக மிக குறைந்த முதலீட்டில் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க உதவும் 5 வழிகள்! Representative Image

குறைந்த முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்க மற்றொரு வழி டிவிடெண்ட் செலுத்தும் பங்குகளில் முதலீடு செய்வது. டிவிடெண்ட் பங்குகள் என்பது பங்குதாரர்களுக்கு தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை டிவிடெண்ட் வடிவில் செலுத்தும் பங்குகளாகும், மேலும் கூடுதல் வருமானத்தை ஈட்ட குறைந்த ஆபத்துள்ள வழியைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு அவை நல்ல வாய்ப்பாக இருக்கும். பங்குச் சந்தையில் எந்த உத்தரவாதமும் இல்லை என்றாலும், டிவிடெண்ட் பங்குகள் நிலையான வருமானத்தை வழங்க முடியும், இது காலப்போக்கில் அதிக பணம் சம்பாதிக்க உதவும்.

 

பணம் தரும் ஆன்லைன் சர்வே: 

 

மிக மிக குறைந்த முதலீட்டில் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க உதவும் 5 வழிகள்! Representative Image

உங்களிடம் கூடுதல் நேரம் இருந்தால் ஆன்லைனில் பணம் தரக்கூடிய சர்வே-யில் பங்கேற்கலாம். இந்த அணுகுமுறையின் மூலம் நீங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தின் அளவு பெரும்பாலும் சிறியதாக இருந்தாலும், இது குறைந்த செலவில் மற்றும் சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்க எளிதான வழியாகும்.

 

சோசியல் மீடியா மூலம் பணம் சம்பாதிக்கலாம்: 

 

 

மிக மிக குறைந்த முதலீட்டில் எக்ஸ்ட்ரா பணம் சம்பாதிக்க உதவும் 5 வழிகள்! Representative Image

சமூக ஊடகங்களில் உங்களுக்குப் பின்தொடர்பவர்கள் அதிகமாக இருந்தால், பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்து, அவர்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளை உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு விளம்பரப்படுத்துவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். 

 

குறிப்பு: குறைந்த முதலீட்டில் அதிக பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன, மேலும் உங்களுக்கான சரியான உத்தி உங்கள் திறமைகள், ஆர்வங்கள் மற்றும் வளங்களைப் பொறுத்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்