Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

ஆதார் எண்ணுடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டும்… விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு….!

Gowthami Subramani October 15, 2022 & 20:30 [IST]
ஆதார் எண்ணுடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டும்… விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு….!Representative Image.

ஆதார் எண்ணுடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு, இந்திய அரசால் ஜனவரியில் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ ஆணையமாக, ஆதார் கார்டு விளங்குகிறது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தினன், அதிகார வரம்பிற்குட்பட்ட இந்த ஆணையமானது, இந்திய மக்களுக்கு 12 இலக்க எண் அடிப்படையிலான ஆதார் அட்டையை வழங்கி வருகிறது.

ஆதார் அட்டைகளை பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஆவணங்களுடன் இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், வங்கிக் கணக்கு, பான் கார்டு, வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை இணைக்குமாறு கூறப்பட்டது. மேலும், சமீபத்தில் மின் நுகர்வோர் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு கூறப்பட்டது. நுகர்வோர்கள், இலவச மின்சார சேவை அல்லது மானியத்தில் மின்சாரம் பெறுவதற்கு கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதன் படி, தற்போது நாடு முழுவதும் 16 மாநிலங்களில், ஆதார் எண்ணை குழந்தைகளின் பிறப்பு சான்றிதழுடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முகமை மேற்கொண்டு வருகிறது.

தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் சமயத்தில் அவர்களது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்படுகிறது. மேலும், குழந்தைக்கு 15 வயதாகும் போது அவர்களது பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்