Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

செப்டம்பர் மாதத்தில் குறைந்த பணவீக்கம்.. இருந்தாலும் இந்த சிக்கல் எல்லோருக்கும் வரும்…

Gowthami Subramani October 15, 2022 & 10:25 [IST]
செப்டம்பர் மாதத்தில் குறைந்த பணவீக்கம்.. இருந்தாலும் இந்த சிக்கல் எல்லோருக்கும் வரும்… Representative Image.

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில், பணவீக்க விகிதம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.7% குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்கள், கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருள்கள், மின்சாரம், ஜவுளி, அடிப்படை உலோகங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்ததால், கடந்த ஆண்டும் பண வீக்கம் அதிகரித்துள்ளது.

அதன் படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 12.41% ஆக இருந்தது. தற்போதைய அறிவிப்பின் படி, உணவுப் பொருள்கள் மற்றும் உணவு தயாரிப்புகள் உள்ளிட்டவை அடங்கிய உணவு குறியீடு செப்டம்பர் மாதத்தில் 175.2 ஆக சரிந்தது. இது, ஆகஸ்ட் மாதத்தில் 176.0 ஆக இருந்தது.

உணவு குறியிட்டீன் அடிப்படையில், பணவீக்க விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.93%-லிருந்து, செப்டம்பர் மாதத்தில் 8.08% ஆக குறைந்துள்ளது.

இவ்வாறு பண வீக்கம் சரிவு நிலை தொடர்ந்து நீளுமா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், கொரோனா, ரஷ்ய உக்ரைன் போர் தாக்குதல் போன்றவற்றால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்