Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

April Month Bank Holidays List 2022: ஏப்ரல் மாசத்துல மட்டும் இத்தனை நாள் லீவா?

Gowthami Subramani March 23, 2022 & 18:55 [IST]
April Month Bank Holidays List 2022: ஏப்ரல் மாசத்துல மட்டும் இத்தனை நாள் லீவா?Representative Image.

April Month Bank Holidays List 2022: இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்தம் 15 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, ரிசர்வ் வங்கி எந்தெந்த நாள்கள் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும், என்ன காரணம் எனவும் வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளது (April Month Holidays List 2022).

 

வங்கிகள் இயங்கப்படாத நாள்கள்

வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதற்கான காரணம்

ஏப்ரல் 1

இந்த ஆண்டிற்கான வங்கிக் கணக்குகள் மூடல் (அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை)

ஏப்ரல் 2

உகாதி திருவிழா / நவராத்திரி முதல் நாள் / தெலுங்கு வருடப்பிறப்பு / குடி பத்வா / சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பெங்களூர், சென்னை, ஹைதராபாத், ஜம்மு, முபை, இம்பால், நாக்பூர், பனாஜி, ஸ்ரீ நகர், பேலாபூர்

ஏப்ரல் 3

ஞாயிற்றுக்கிழமை (வார இறுதிநாள் விடுமுறை)

ஏப்ரல் 4

சாரிஹூல் – ராஞ்சி வங்கிகளுக்கு விடுமுறை

ஏப்ரல் 5

பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் – ஹைதராபாத் வங்கிகளுக்கு விடுமுறை

ஏப்ரல் 9

சனிக்கிழமை (மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை)

ஏப்ரல் 10

ஞாயிற்றுக்கிழமை (வார இறுதிநாள் விடுமுறை)

ஏப்ரல் 14

மகாவீர் ஜெயந்தி / பைசாகி / தமிழ் புத்தாண்டு / பிஜூ விழா / போஹர் பிஹூ / டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி – சிம்லா & ஷில்லாங் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஏப்ரல் 15

புனித வெள்ளி / ஹிமாச்சல் நாள் / பெங்காலி புத்தாண்டு / விஷூ / போஹாக் பிஹூ – ஜெய்ப்பூர், ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

ஏப்ரல் 16

போஹாக் பிஹூ – கவுகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை

ஏப்ரல் 17

ஞாயிற்றுக்கிழமை (வார இறுதிநாள் விடுமுறை)

ஏப்ரல் 21

கடியா பூஜை – அகர்தலாவில் வங்கிகள் செயல்படாது

ஏப்ரல் 23

சனிக்கிழமை (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)

ஏப்ரல் 24

ஞாயிற்றுக்கிழமை (வார இறுதிநாள் விடுமுறை)

ஏப்ரல் 29

ஜூமாத்-உல்-விடா / ஷப்-இ-கத்ர் – ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் வங்கிகளுக்கு விடுமுறை

 

மேற்குறிப்பிட்ட அட்டவணையின் படி, குறிப்பிடப்பட்டுள்ள வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் (April Month Bank Holidays List 2022). எல்லா வங்கிகளுக்கும் இது பொருந்தாது. எந்தெந்த மாநிலத்தில் எந்தெந்த பகுதிகளில் வங்கிகள் இயங்கும் எனத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல, வங்கிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொதுத்துறை, தனியார் துறை, கூட்டுறவுத் துறை, பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் என அனைத்து வகையான வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தக் கூடியது (Bank Holidays List April 2022). அது மட்டுமல்லாமல், வங்கி விடுமுறை தினங்களில் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்