Fri ,Dec 01, 2023

சென்செக்ஸ் 66,988.44
86.53sensex(0.13%)
நிஃப்டி20,133.15
36.55sensex(0.18%)
USD
81.57
Exclusive

இந்த மாதத்தில் 14 நாள்கள் விடுமுறை… சரியா பிளேன் பண்ணி பண்ணனும் மக்களே…!

Gowthami Subramani Updated:
இந்த மாதத்தில் 14 நாள்கள் விடுமுறை… சரியா பிளேன் பண்ணி பண்ணனும் மக்களே…!Representative Image.

டிசம்பர் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப 14 நாள்கள் விடுமுறை அறிவித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் விடுமுறை நாள்கள் மிகவும் குறைவாக இருந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் 14 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதன் படி, இந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுகளைத் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், டிசம்பர் மாதத்தில் 14 நாள்கள் விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், டிசம்பர் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும், இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி, கீழே கொடுக்கப்பட்ட தினங்களில் விடுமுறை அளிக்கப்படும்.

நாள் மற்றும் கிழமை

விடுமுறைக்கான காரணம்

டிசம்பர் 3, 2022 & சனிக்கிழமை

புனித பிரான்சிஸ் சேவியர் நாள் – கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 4, 2022 & ஞாயிற்றுக்கிழமை

-

டிசம்பர் 5, 2022 & திங்கள்கிழமை

குஜராத் மாநிலத்தில் 2-ம் கட்டத் தேர்தல் – குஜராத்தில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 10, 2022 & சனிக்கிழமை

இரண்டாவது சனிக்கிழமை

டிசம்பர் 11, 2022 & ஞாயிற்றுக்கிழமை

-

டிசம்பர் 12, 2022 & திங்கள்கிழமை

டோங்கான் நெங்மின்ஜா சங்மா – ஷில்லாங்கில் விடுமுறை

டிசம்பர் 18, 2022 & ஞாயிற்றுக்கிழமை

-

டிசம்பர் 19, 2022 & திங்கள்கிழமை

கோவா மாநிலம் சுதந்திரம் பெற்ற தினம் - கோவாவில் வங்கிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 24, 2022 & சனிக்கிழமை

கிறிஸ்துமஸ் பண்டிகை, மேகாலயா, ஷில்லாங்கில் விடுமுறை

டிசம்பர் 25, 2022 & ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 26, 2022 & திங்கள்கிழமை

கிறிஸ்துமஸ், லூசுங், நாம்சூங் பண்டிகைக்காக மேகாலயா, ஷில்லாங், மிசோரம், சிக்கம், காங்டாக்கில் விடுமுறை

டிசம்பர் 29, 2022 & வியாழக்கிழமை

குருகோவிந்த் சிங் பிறந்தநாள் - சண்டிகர், பஞ்சாபில் விடுமுறை

டிசம்பர் 30, 2022 & வெள்ளிக்கிழமை

கியாங் நான்பாக் – ஷில்லாங், மேகாலயாவில் விடுமுறை

டிசம்பர் 31, 2022 & சனிக்கிழமை

புத்தாண்டு வரவேற்பு, அய்ஸ்வால், மிசோராவில் விடுமுறை

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்