Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

Bank Information : குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள்..! ஈஎம்ஐ இவ்வளவு தானா..?

Muthu Kumar April 27, 2022 & 13:55 [IST]
Bank Information : குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகள்..! ஈஎம்ஐ இவ்வளவு தானா..?Representative Image.

Bank Information : 2019 நிதியாண்டில் 75 கோடி அளவில் இருந்த தனிநபர் கடன் வழங்கல் அளவு தற்போது, 2022 நிதியாண்டில் இரண்டு மடங்கு அதிகரித்து 1,47,236 கோடியாக உள்ளது. இந்நிலையில் குறந்த வட்டியில் தனிநபர் கடன் வழங்கும் வங்கிகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கியில் தனிநபர் வட்டி விகிதம் 9.60 % முதல் 13.85 % வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்திற்கு 1,105 முதல் 2,319 வரை ஈஎம்ஐ வழங்கப்படுகிறது. அதன்படி, எஸ்பிஐ வங்கியில் தனிநபருக்கு 20 லட்சம் வரை கடன் வழங்கிகின்றனர். இதன் ஈஎம்ஐ காலம் 6 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கியில்  தனிநபர் கடனுக்கு 10.25 % முதல் வட்டி தொடங்குகிறது. அதன்படி, 1 லட்சத்திற்கான ஈஎம்ஐ தொகை 2,137 ஆகும். மேலும் இந்த வங்கியில் அதிகப்பட்சமாக 40 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. இதன் ஈஎம்ஐ காலம் 6 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கியில் தனிநபர் கடனுக்கு 10.25 % முதல் வட்டி தொடங்குகிறது. 1 லட்சத்திற்கான ஈஎம்ஐ தொகை 2,137 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வங்கியில் அதிகபட்சமாக 25 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. இதற்க்கு 6 ஆண்டுகள் வரை ஈஎம்ஐ காலம் கிடைக்கும். 

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கியில் தனிநபர் கடன் 10.25 % வட்டி முதல் தொடங்குகிறது. 1 லட்சத்திற்கு ஈஎம்ஐ கட்டணமாக 2,137 செலுத்த வேண்டும். இந்த வங்கியில் அதிகபட்சமாக 15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்க்கு 5 ஆண்டுகள் வரை ஈஎம்ஐ காலம் கிடைக்கும். 

டாடா கேபிடல் வங்கி 

டாடா கேபிடல் வங்கியில் தனிநபர் கடனின் வட்டி விகிதம் 10.99 % முதல் தொடங்குகிறது. ஒரு லட்சம் கடன் பெற்றீர்கள் என்றால் ஈஎம்ஐ தொகையாக 2,174 வசூல் செய்யப்படும். மேலும் இந்த வங்கியில் தனிநபருக்கு அதிகபட்சமாக 35 லட்சம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்க்கு 6 ஆண்டுகள் வரை ஈஎம்ஐ காலம் கிடைக்கும். 

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 10.25 % முதல் தொடங்குகிறது. ஒரு லட்சத்திற்கான ஈஎம்ஐ தொகை 2,137 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வங்கியில் ஒருவருக்கு அதிகபட்சமாக 25 லட்சம் வரையில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. இதற்க்கு 5 ஆண்டுகள் வரை ஈஎம்ஐ காலம் கிடைக்கும். 

பஜாஜ் ஃபின்ஸர்வ் 

பஜாஜ் ஃபின்ஸர்வில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 13 % முதல் தொடங்குகிறது. 1 லட்சம் கடன் பெற்றீர்கள் என்றால் ஈஎம்ஐ தொகையாக 2,275 வசூல் செய்யப்படும். தனிநபருக்கு அதிகபட்சமாக 25 லட்சம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இதற்க்கு 5 ஆண்டுகள் வரை ஈஎம்ஐ காலம் கிடைக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்