வாரத்தின் இரண்டாவது நாளான இன்று தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ள இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்றை வர்த்தகத்தின் இறுதியில், சென்னையில் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 5,045 ரூபாய்க்கும், சவரன் 40,360 ரூபாய்க்கும் விற்பனையானது.
ஆனால் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை வர்த்தகத்தின் படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 35 ரூபாய் சரிந்து, 5,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதேபோல் 24 காரட் சுத்த தங்கமும் கிராம் ஒன்றிற்கு35 ரூபாய் குறைந்து 5,412 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 43,296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரை கிராமிற்கு ஒரு ரூபாய் 70 காசுகள் வரை சரிந்து 70.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 1,700 ரூபாய் அளவிற்கு சரிந்து 70,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவில் தினந்தோறும் 31 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்தியாவை விட தங்கத்தைப் பயன்படுத்துவதில் உலகிலேயே சீன மக்கள் முன்னணியில் உள்ளனர். ஆனால் சீனாவில் நிலவி வரும் கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாடுகள் மக்களிடையே தங்கம் வாங்குவதை குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் தேவை குறைந்ததை அடுத்து அதன் விலையிலும் அதிரடி மாற்றம் ஆரம்பமாகியுள்ளது.
இருப்பினும், சீனாவில் கொரோனா லாக்டவுனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சில தளர்வுகளை அந்நாட்டு அறிவித்துள்ளது. நாளை முதல் கடைகளை திறப்பது உள்ளிட்ட தளர்வுகளை சீன அரசு அறிவித்துள்ளதால் இது தங்கத்தின் விலையில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…