சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதன் காரணமாக, கடந்த ஜூன் மாதம் முதலே 7 ஆவது முறையாக வர்த்தகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் மந்த நிலை, தொடர்ந்து விலை உயர்வைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அதன் படி, வர்த்தக தேவைக்குப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர் விலை, தற்போது ரூ.115.50 குறைக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், கடந்த ஜூன் மாதம் முதல் 7 ஆவது முறையாக வர்த்தகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், தேனீர், கடை, உணவகம் உள்ளிட்ட பல இடங்களில் வர்த்தக எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ள இந்த விலை குறைப்பின் படி, டெல்லியில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,859.50 லிருந்து ரூ.1,744 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் ரூ.1,696 கொல்கத்தாவில் ரூ.1,846 மற்றும் சென்னையில் ரூ.1,893 ஆகவும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து 1,068.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தில் தொடக்கத்திலும், எரிவாயு சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும். இந்நிலையில், இந்த நவம்பர் மாதத்தில் விலை மாற்றத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…