Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Cylinder Latest Update: இனி சிலிண்டர இப்படி தான் வாங்க முடியுமா…? மத்திய அரசின் புதிய அறிவிப்பு…!

Gowthami Subramani June 06, 2022 & 15:45 [IST]
Cylinder Latest Update: இனி சிலிண்டர இப்படி தான் வாங்க முடியுமா…? மத்திய அரசின் புதிய அறிவிப்பு…!Representative Image.

Cylinder Latest Update: சிலிண்டர் இணைப்பை வாங்குவதற்கான முறையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உஜ்வாலா திட்டம் (Ujjwala Scheme in Tamil)

இந்தியாவில் அனைவரும், சமையல் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்பட்டது. மக்களுக்குப் பயனுள்ள இத்திட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன் படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ், இலவச எல்பிஜி எரிவாயு இணைப்புக்குக் கிடைக்கக் கூடிய மானியத்தில் பெரிய மாற்றம் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளது (Ujjwala Scheme). உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி இணைப்பு எடுக்க நினைப்பவர்கள், இந்தச் செய்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

A picture containing tree, outdoor, person

Description automatically generated

இலவச இணைப்பு (How to Get Free Cylinder)

மத்திய அரசினுடைய உஜ்வாலா திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது. இந்த சிலிண்டரின் எடை 14.2 கிலோ ஆகும். மேலும், இதன் விலை 3,200 ரூபாய். உஜ்வாலா திட்டத்தின் கீழ் எடுத்ததால், இந்த சிலிண்டருக்கு 1,600 ரூபாய் மானியம் கிடைக்கிறது.

இதே நேரத்தில், சிலிண்டர்களை விற்கும் நிறுவனமங்கள் முன்பணமாக ரூ. 1,600 முன்பணமாகக் கொடுக்கிறது. இருந்தப் போதிலும், இந்த மானியத் தொகை அடுத்தமுறை சேர்க்கப்படும் போது EMI-ஆக வசூலிக்கப்படுகின்றன (How to Get Free Cylinder in Tamil).

கட்டமைப்பில் மாற்றம் (Free Gas Cylinder Scheme)

உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணையக் கூடிய புதிதாக இணையக்கூடிய மானியத்தினுடைய கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. நிதியாண்டு அறிக்கை வெளியிட்ட சமயத்தில் ரூ. 1 கோடி செலவு சிலிண்டர்களுக்கான புதிய இணைப்புகளை வழங்குவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த சமயத்தில், புதிதாக இணையும் இணைப்புகளுக்கு மானியத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது (Free Gas Cylinder Scheme in Tamil).

A picture containing wall, indoor, person, preparing

Description automatically generated

இனி EMI இல்லையா?

இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் சிலிண்டர் வாங்கும் சமயத்தில் முன்பணம் செலுத்த வேண்டும். இந்தப் புதிய மாற்றத்திற்குப் பிறகு, முன்பணம் செலுத்தக் கூடிய நிறுவனம் மக்களிடமிருந்து ரூ. 1,600 -ஐ மொத்தமாக வசூலிக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது செயல்பட்டு வரும் EMI மூலம் முன்பணத்தைப் பெறுவது இனி அப்படி இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும், முன்பணத்தைப் பொதுமக்கள் மொத்தமாக செலுத்த வேண்டியிருக்கும் (Ujjwala Scheme Eligibility).

சிலிண்டர்களைப் பெற

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களைப் பெறுதல் எளிது. ஆனால், இந்தத் திட்டத்தின் படி, வறுமைக் கோட்டுக்குள் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். இத்திட்டம் சாதாரண மக்களும் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமைந்தது. ஆனால், இதில் ஏற்படக் கூடிய திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் தெரியுமா?

எவ்வாறு பதிவு செய்யலாம்? (How to Apply in Ujjwala Scheme)

உஜ்வாலா திட்டத்தின் இலவச சிலிண்டர்களைப் பெறுவதற்கான முறைகளைப் பற்றி இங்குக் காணலாம்.

A picture containing can

Description automatically generated

இந்தத் திட்டத்தின் படி, வாடிக்கையாளர்கள் பதிவு செய்வதற்கு இத்திட்டத்தில் இணைந்திருக்க வேண்டும். அதன் படி, இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து, அதை LPG விநியோகம் செய்யக்கூடிய நபரிடம் கொடுக்க வேண்டும் (Ujjwala Scheme UPSC). இதில் பதிவு செய்வதற்கு, சிலிண்டர் விநியோகம் பெற நினைப்பவர்களின் முழு முகவரி, வங்கிக் கணக்கு தகவல்கள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடைய ஆதார் எண் ஆகியவை தேவை. இவற்றைச் சமர்ப்பித்த பிறகே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

இது பற்றிய மேலும் சில தகவல்களுக்கு pmujjwalayojana.com என்ற இணையதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்