Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Dealers Income for Sale Petrol Pump: பெட்ரோல் டேங்கிற்கு பெட்ரோல் எப்படி வருது..? இதுல யார் யாருக்குலாம் லாபம்…? நீங்க கண்டிப்பாக தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்….!

Gowthami Subramani June 02, 2022 & 15:35 [IST]
Dealers Income for Sale Petrol Pump: பெட்ரோல் டேங்கிற்கு பெட்ரோல் எப்படி வருது..? இதுல யார் யாருக்குலாம் லாபம்…? நீங்க கண்டிப்பாக தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம்….!Representative Image.

Dealers Income for Sale Petrol Pump: பெட்ரோல் பங்கில் பெட்ரோல் மற்றும் டீசல்களை விற்பனை செய்வதன் மூலம் எவ்வளவு லாபம் பெறுகிறார்கள் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். அரசு நிர்ணயப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் மாறுபடும்.

அத்தியாவசியமான ஒன்று

மனிதனின் அன்றாடத் தேவைக்காகப் பயன்படுவதில் ஒன்றாக இப்போது பெட்ரோலும் உள்ளது. இன்றைய நவீன உலகத்தில், வாகனம் இல்லாத நபரை நாம் எங்கும் காண முடியாது. அந்த அளவிற்குப் பெரும்பாலானோர் வாகனங்களை உபயோகப்படுத்துகின்றனர். இதனால், மக்கள் மத்தியில் பெட்ரோல் உபயோகிப்பதும் அதிகமாகி விட்டது (Petrol Pump Income Per Day).

ஆனால், இதற்கு மாற்றம் தெரிவிக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தன. இந்த மின்னணு வாகனங்களை உபயோகிப்பதன் மூலம், பெட்ரோல் உபயோகிப்பதைக் குறைக்க முடியும் என்று மக்கள் அதனைப் பயன்படுத்த மெதுவாக நகரத் துவங்கினர். ஆனால், கடந்த சில மாதங்களாக, எலெக்ட்ரிக் வண்டிகள் திடீரென தீப்பற்றி விடுகின்றன. இதனால், மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் (How much Profit in Petrol Pump in India). மின்னணு வாகனங்களை மீண்டும் நிறுவனத்திடம் தரப் போவதாகவும் அறிவிக்கப்பட்டன.

பெட்ரோல் விலை

இந்த சமயத்தில் சாதாரண வாகனங்களையே மீண்டும் மக்கள் விரும்புகின்றனர். ஆனால், பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு சமயத்தில் கடும் உச்சத்திற்கு செல்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு 15 நாள்களுக்கும் ஒரு முறையே பெட்ரோல் டீசல் விலையை மாற்றி வந்தது. ஆனால், சில காரணங்களால் 2017 ஆம் ஆண்டு, டைனமிக் பிரைசிங் முறையில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியது. அதாவது, பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றப்பெரும் விஷயமாக மாறி விட்டது. இதன் படி, இந்தியாவில் பெட்ரோல் விநியோகம் டீலர் முறையில் செய்யப்படுகிறது (How much Petrol Pump Owner Earn Per Litre).


Representative Image. டிகிரி முடிச்சிருக்கிங்களா…? இதோ உங்களுக்கு மாஸான வேலை…! அதுவும் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?


டீலராகச் சேருதல்

ஊரில், பெட்ரோல் பங்க் வைக்க நினைக்கும் நபர்கள், ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனத்திடம் சேர வேண்டும். இப்படி சேரும் நபர்களுக்குப் பெட்ரோல் பங்க் வைக்கத் தேவையான பொருள்கள் அனைத்தையும் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனமே வழங்கும் (Petrol Pump Investment Cost). அந்த குறிப்பிட்ட பெட்ரோல் பங்குகளுக்கு, ஆயில் நிறுவனமே பெட்ரோலைக் கொண்டு செல்லும். இங்கு விற்பனையாகும் பெட்ரோல்களுக்குக் கிடைத்த தொகையில் டீலர்களுக்குக் கமிஷன் கிடைக்கும் (Petrol Pump License Cost).

டீலருக்கான லாபம்

குறிப்பிடப்பட்ட இடத்தில், பெட்ரோலை விநியோகம் செய்யும் போது, அதன் கட்டமைப்பிலேயே, விநியோகம் செய்யப்படும் நபர்களுக்கான சம்பளம் மற்றும் அவர்களுக்கான பிற வசதிகள் செய்யப்பட்டிருக்கும். அதன் படி, ஒவ்வொரு டீலருக்கும், சுமார் 20 ஆயிரம் கொள்ளளவு கொண்ட பெட்ரோல், டீசல் டேங்குகள் பொருத்தப்படும் (Petrol Dealers Price).

இவ்வாறு நிரப்பிய டேங்குகளில், 8 ஆயிரம் லிட்டருக்குக் கீழ் பெட்ரோல் குறையும் சமயத்தில், மீண்டும் ஆயில் நிறுவனத்திடம் அடுத்த லோடுக்கான ஆர்டர் போட வேண்டும். அதன் படி, அவர்களுக்கு 12 ஆயிரம் லிட்டர் அளவிலான பெட்ரோல் வழங்கப்படும். இந்த வகையில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடிய டீலர்களுக்கு லாபம் கிடைக்கிறது (How much Profit in Petrol Pump in India). அதன் படி, டெல்லியில் உள்ள டீலருக்கு ரூ. 3.78 கமிஷனாக பெட்ரோல் விற்பனை செய்பவருக்கும், ரூ. 2.57 கமிஷனாக டீசல் விற்பனை செய்பவருக்கும் கிடைக்கிறது. மேலும், மற்ற பகுதிகளில் டீலருக்கு ஒரு லிட்டருக்கு பெட்ரோலில் ரூ. 2.90 -உம், டீசலில் ரூ. 1.85 -ஐயும் கமிஷனாகப் பெறுகின்றனர் (Petrol Pump Income Per Month 2022).


Representative Image. மாதம் ரூ. 1400 சேமித்தால், ரூ. 35 லட்சம் கிடைக்குமாம்… போஸ்ட் ஆபிஸின் புதிய திட்டம்…. உடனே கிளம்புங்க….


கமிஷனில் மாற்றம் இல்லை

ஒவ்வொரு நாளும் மாறக்கூடிய பெட்ரோல், டீசல் விலையின் மாற்றங்களால், டீலருக்கு வரக் கூடிய இந்தத் தொகையில் எந்த மாற்றமும் இருக்காது. இந்தத் தொகை டைனமிக் ப்ரைசிங் முறையைக் கொண்டு வந்த நேரமான கடந்த 2017 ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டதாகும் (Petrol Pump Income Per Day).

இதற்கிடையில், இந்தத் தொகையில் 40 காசுகள் லைசென்ஸ் கட்டணமாகச் செலுத்தப்படுகிறது. மேலும், இதில் பெட்ரோல் ஆவியாவதால் ஏற்படக் கூடிய நஷ்டங்களையும் சமாளிக்க வேண்டும். இந்தத் தொகையில், பெட்ரோல் பங்கில் பணியாற்றுபவர்களுக்கான சம்பளத்தொகை வழங்கப்படுகிறது. பங்கின் பராமரிப்பு மற்றும் கரெண்ட் பில் போன்றவையும் இதன் மூலமே செலுத்தப்படுகிறது.

மறு ஆய்வுக்கான கோரிக்கை

இதற்கிடையில் உயர்ந்து வரும் பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்கிடையே நிலைமையைச் சமாளிக்க முடியாமல் உள்ளது. இதனால், டீலர்கள் கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வங்கிக் கடன்கள், செலவுகள், விலைவாசி உயர்வு போன்ற பல காரணங்களால், கமிஷன் தொகையை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு 6 மாத காலத்திற்கு ஒரு முறை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த வகையில், தான், பெட்ரோல் பங்க் டீலருக்கு லாபம் கிடைக்கப்பெறுகிறது.


Representative Image. நீண்ட நாள்களாக காத்திருந்த வேலை….! மாதம், 1.25,000 வரை சம்பளத்தில் ரெடியா இருக்கு…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை