Thu ,Feb 09, 2023

சென்செக்ஸ் 60,663.79
377.75sensex(0.63%)
நிஃப்டி17,871.70
150.20sensex(0.85%)
USD
81.57
Exclusive

வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை திரட்டும் வழிகள் | Down Payment for Home Loan

Priyanka Hochumin Updated:
வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை திரட்டும் வழிகள் | Down Payment for Home Loan Representative Image.

வீட்டுக் கடன் வாங்கும் போது நமக்கு முழுமையான தொகை கிடைக்காது. எனவே, நாம் நம்மிடம் இருக்கும் பணத்தை முன்பணமாக போட வேண்டியது அவசியம். இதற்கு முந்தைய பதிவில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, வீட்டுக் கடன் வழங்குவதில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்றுகிறது என்பதை தெளிவாக கூறியுள்ளோம். இந்த பதிவில் முன்பணம் எந்தெந்த வகையில் நம்மால் ஏற்பாடு பண்ண முடியும் என்பதை விளக்கமாக தெரிவிக்கிறோம். அதனுள் உங்களுக்கு எது தோதாக இருக்கிறதோ அதனை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக புது வீடு வாங்குங்கள்.

வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை திரட்டும் வழிகள் | Down Payment for Home Loan Representative Image

தனிநபர் கடன் | Personal Loan

முன்பணத்தை வேற வழியில் ஏற்பாடு செய்ய முடியாத நிலைமையில் பலர் பர்சனல் லோன் எடுத்து பயன்படுத்துகின்றனர். காரணம்! இந்த கடன் மிகவும் சுலபமாக கிடைக்கிறது. ஒருவருக்கு நல்ல மாத சம்பளம் மற்றும் அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்து விட்டால் போதும். பர்சனல் லோனுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் ரூ.1 முதல் ரூ.25 லட்சம் வரை கடனாக தருகின்றனர். ஆனால் இதற்கான வட்டி விகிதம் 18% முதல் 22% வரை இருக்கும்.

மேலும் சிலர் கிரெடிட் கார்டு பயன்படுத்தி கடன் வாங்கி முன்பணம் காட்டுகின்றனர். இந்த தவறை மட்டும் ஒருபோதும் செய்து விடாதீர்கள். ஏனெனில் அதற்கான வட்டியானது 35-40 சதவீதமாக இருக்கும் எனில் உங்களால் கடனை அடைக்க முடியாது.

வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை திரட்டும் வழிகள் | Down Payment for Home Loan Representative Image

நகை கடன் | Gold Loan

எப்பையும் போல நடுத்தர மக்கள் அவசர காலத்தில் பணம் ஏற்பாடு செய்ய வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்குவது வழக்கம் தான். வீட்டுக் கடனுக்கான முன்பணத்தையும் இப்படி திரட்டலாம். இருப்பினும் நகை கடனுக்கான வட்டி 8 - 14% வரை இருக்கிறது. எனினும் தங்கத்தின் மதிப்பில் 70% முதல் 75% வரை கடன் தொகை அளிக்கப்படும். நீங்கள் ஒருவேளை நகைக்கடன் வாங்க வேண்டும் என்றால் பொதுத்துறை வங்கியில் வாங்கலாம், அங்கு தான் வட்டி குறைவு.

இதை விட நகையை அடமானம் வைப்பதற்கு பதிலாக அதனை விற்று முன்பணம் ஏற்பாடு செய்வது புத்திசாலித்தனமான யோசனையாகும். ஏனெனில் தொகையும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும், வட்டி கட்டும் தொந்தரவு இருக்காது. கூடிய விரைவில் வீட்டுக் கடன் சுமை குறைந்ததும் புது நகை வாங்கிக்கொள்ளலாம். இந்த முடிவை வீட்டில் அனைவரும் யோசித்து முடிவெடுங்கள்.

வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை திரட்டும் வழிகள் | Down Payment for Home Loan Representative Image

தெரிந்தவர்கள் மூலம் கடன் |Loan from Friends and Family

அதாவது வெளியில் பணம் வாங்குவதை விட நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களிடம் கடன் வாங்கினால் சுமை சற்று குறைவு. ஒரு சிலர் கடனுக்கான வட்டியை குறைவாக கொடுப்பார்கள், ஒரு சிலருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திரும்ப செலுத்து அடைத்து விடலாம். இருப்பினும் வாங்குவதற்கு முன்பு தெளிவாக முடிவு செய்து வாங்குங்கள், இதனைக் கொண்டு உங்கள் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

நிறுவனத்தில் கடன் |workplace Loan

பலரும் வேலை செய்யும் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு சுலபமாக கடன் கிடைக்கும். மேலும் வடியும் குறைவு, ஆவணங்களும் பெரிதாக தேவைப்படாது. அதே போல மாத சம்பளத்தில் இருந்து கடனை அடைத்துக்கொள்ளலாம். அது மட்டும் இல்லை நீண்ட நாட்கள் கடனை அடைப்பதற்கான வசதியும் இருப்பதால் இதற்கு முதலில் முன்னுரிமை செலுத்தினால் நல்லது.

வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை திரட்டும் வழிகள் | Down Payment for Home Loan Representative Image

பி.எஃப் கடன் | PF Loan

மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு பிராவிடன்ட் ஃபண்ட் (PF) பிடித்தம் செய்யப்படும். இப்படி பி.எஃப் பிடிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு பின்னர் கடன் வாங்கலாம். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால், பி.எஃப் தொகையை கடனாக வாங்கி விட்டால் அதில் இருந்து வரும் வருமானம் கொஞ்சம் கொஞ்சமாக நின்று விடும். மேலும் கடைசி காலத்தில் ஓய்வூதியத்திற்கான சேமிப்பு இருக்காது. அப்படி வேற எந்த வழியும் இல்லை இது மட்டும் தான் என்ற பட்சத்தில் விருப்ப பி.எஃப் (VPF) மூலம் கடன் வாங்கிய தொகைக்கு ஏற்ப பி.எஃப் பங்களிப்பை அதிகரித்து ஈடுகட்ட வேண்டும். அப்போது தான் பிற்காலத்தில் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க முடியும்.

இதை தவிர முதலீடு முதல் நீங்கள் சேர்த்து வைத்து தொகை இருந்தால் அதனை முன்பணமாகவும் பயன்படுத்தலாம்.

வீட்டுக் கடனுக்கான முன்பணத்தை திரட்டும் வழிகள் | Down Payment for Home Loan Representative Image

பழைய வீடு வாங்கினால் | Guidance for Home Loan

அதாவது நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி எந்த அளவிற்கு பழைய வீடு வாங்குகிறீர்கள் என்பது பொறுத்து தான் முன்பணம் கட்ட வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு பழைய வீட்டை வாங்க விரும்பினால் சுமார் 35% தொகையை முன்பணமாக கட்ட வேண்டும். அதுவே அந்த வீடு 15, 20 ஆண்டுகள் பழமையான வீடு என்றால் 40% - 50% வரை முன்பணம் செலுத்த வேண்டும். ஏனெனில் பழைய வீடு என்பதால் கண்டிஷன் சரியில்லாமல் வீடு இடிந்து விட்டால் அல்லது வேறு ஏதாவது கோளாறு இருந்து விட்டால் கடன் வாங்குபவர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாமல் இருப்பதற்காத தான் முன்பணம் அதிகமாக வழங்க வேண்டும்.

புதுசா கட்டிட்டு இருக்கும் வீடு என்றால் | Down Payment for Home Loan

வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் இருந்து வீட்டுக் கடன் வாங்கி, புதிதாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை வாங்கும்பட்சத்தில் கடன் தொகைக்கு ஏற்ப முன்பணம் செலுத்தினால் போதும். நம் கையில் இருக்கும் பணத்தை சில மாதங்கள் வரை பிரித்து முன்பணமாக கட்டலாம். இந்த வசதியானது பல நிதி வழங்கும் நிறுவனங்கள் புது வீடு வாங்குபவர்களுக்கு தருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்