Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மீனவர்களை கதற விட்ட ‘மாண்டஸ்’ புயல்; வருவாய் இழப்பு எத்தனை கோடி தெரியுமா? 

Kanimozhi Updated:
மீனவர்களை கதற விட்ட ‘மாண்டஸ்’ புயல்; வருவாய் இழப்பு எத்தனை கோடி தெரியுமா? Representative Image.

மாண்டஸ் புயல் காரணமாக மீன்வர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குச் செல்லாமல் இருப்பதால் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தூரத்திலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கி.மீ. தூரத்தில்  மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக கடல் பகுதியில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி துறைமுகத்தில் 2வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே இரண்டாவது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி பெரியதாழை ஆலந்தலை தருவைகுளம் வேம்பார் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இருந்து கடலுக்கு செல்லக்கூடிய 3000 கற்கும் மேற்பட்ட  நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன .


வானிலை மையம் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லாததால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்