மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசின் நிதித்துறை வெளியிட்டுள்ளது. அதன் படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது மாற்றம் குறித்த செய்தி வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது, அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயது 58-லிருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டது. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் நிலுவைத் தொகை உள்ளிட்டவை வழங்க தாமதமாவதால், அடுத்த இரண்டு ஆண்டிற்கு அரசு ஊழியர்களின் பதவி காலம் நீட்டிக்கப்படுவதாக அரசு கூறியது.
இந்த நிலையில், தற்போது, கேரள அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது சில நிறுவனங்கள் இதை மாற்றி அமைத்தது.
அதன் படி, பல்வேறு கமிட்டி மற்றும் குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஓய்வு பெறும் வயதை மாற்றியுள்ளது. அதாவது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு, மாநில நிதித்துறையானது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…