Fixed Deposit Rate Increases in Bank: இன்றைய சேமிப்பு… வருங்கால வாழ்க்கைக்கு நல்லதாகும். எனவே ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது. தற்போது நாம் சேமித்து வைக்கும் சேமிப்பு அனைத்தும் பிற்காலத்தில் நமக்கு பேருதவியாக இருக்கும். இந்த நிலையில், தனியார் வட்டி விகிதத்தையும் அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளனர் (Fixed Deposit Interest Rate Increases in All Banks with Details 2022).
அதன் படி, புதிய வட்டி விகிதங்கள் அனைத்தும், கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் நாள் ரிசர்வ் வங்கி வட்டிவிகித்தை 0.50% அதிகரித்து, தற்போது 4.90%-ஆக உயர்ந்து காணப்படுகிறது. இதனால், வங்கிகளில் வீட்டுக்கடன் போன்ற கடன் வழங்குதலுக்கான வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது (FD Interest Rates).
இவ்வாறு வட்டி விகிதம் உயர்வு காரணமாக, மக்கள் வருத்தத்தில் இருந்த நிலையில், சேமிப்புக்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது (Is Fixed Deposit Rate Increases in Bank?).
அந்த வகையில், கோட்டக் மகேந்திரா வங்கியின் வட்டி விகிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கோட்டக் மகேந்திரா வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் (KMB Bank)
ரூ. 50 லட்சம் வரை – 3.5 % மற்றும் ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமான – 5% ஆக புதிய வட்டி விகிதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் (ரூ. 2 கோடி ரூபாய்க்குள்)
இதில், நாள் கணக்கு முதல் ஆண்டு கணக்கு வரை அனைத்து சேமிப்புகளுக்கும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது (KMB Bank Full Details).
எனவே, சேமிப்பு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கென ஒரு அக்கவுண்டைத் தொடங்கி அந்தப் பணத்தினை சேமிப்புக் கணக்கிலோ, அல்லது ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) மூலமோ சேமித்துப் பயன்பெறலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB Bank Fixed Deposit Rate 2022 in Tamil)
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் சேர்ந்த சேமிப்புதாரர்களுக்கு வட்டியை உயர்த்தியுள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி. இது தற்போது, தனது வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
அதன் படி, டெபாசிட் காலத்தைப் பொறுத்த வரை வட்டி விகிதங்களை 10bps முதல் 25 bps என்ற நிலை வரை அதிகரித்துள்ளது. மேலும், இதற்கான புதிய விகிதங்கள் ரூ. 5 கோடி வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஃபிக்ஸ்டு டெபாசிட் வட்டில் விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டதால், இதில் முதலீடு செய்யும் நபர்கள், அவர்களின் கடன்களின் காலத்தைப் பொறுத்து, அவர்களின் வருமானம் மாறும் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், இவர்கள் 6% முதல் 7.25% வரையிலான வருமானத்தைப் பெற முடியும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த வங்கியில், Housing Finance-ல் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களால் செய்யப்படக் கூடிய நிலையான வைப்பு முதலீடுகளுக்கு 0.25 சதவீத வருவாயைத் தொடர்ந்து வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆக்சிஸ் வங்கி (Axix Bank Fixed Deposit Rate)
ஆக்சிஸ் வங்கியிலும் வட்டி விகிதம் கீழ்க்கண்டவாறு உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி, ரூ. 50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்கு வட்டி விகிதத்தை ஆண்டொன்றுக்கு 3% ஆக உயர்த்தி உள்ளது (Axis Bank Fixed Deposit Rates 2022).
மேலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.800 கோடிக்குக் குறைவாக உள்ள சேமிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3.50% வருமானத்தை வங்கி வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI Bank Fixed Deposit Rates)
பஞ்சாப் நேஷனல் மற்றும் ஆக்சிஸ் வங்கிகளைப் போலவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியும் வைப்புத் தொகைக்கான வருமானத்தை 20 அடிப்படை புள்ளிகள் என்ற நிலை வரையிலே அதிகரித்துள்ளது (SBI Fixed Deposit Interest Rates 2022).
இவ்வாறு வங்கிகளில் உயர்த்தப்படும் வட்டி விகித உயர்வால், வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…