Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

இனி ஏடிஎம்-ல் பணம் மட்டுமல்ல.. தங்கமும் எடுக்கலாம்…! வந்தாச்சு கோல்டு ஏடிஎம்…

Gowthami Subramani Updated:
இனி ஏடிஎம்-ல் பணம் மட்டுமல்ல.. தங்கமும் எடுக்கலாம்…! வந்தாச்சு கோல்டு ஏடிஎம்… Representative Image.

இந்தியாவில் முதன் முதலாக ஏடிஎம்-ல் தங்கம் வழங்கக் கூடிய நவீன இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ஏடிஎம்-ல் தங்கம் எப்படி எடுக்கலாம்.? மற்றும் அதன் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இனி ஏடிஎம்-ல் பணம் மட்டுமல்ல.. தங்கமும் எடுக்கலாம்…! வந்தாச்சு கோல்டு ஏடிஎம்… Representative Image

ஏடிஎம்-ல் தங்கம்

மக்கள் எளிதாக ஏடிஎம்-ல் பணம் எடுப்பது போல், தங்கம் எடுக்க ஏடிஎம் இயந்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜெர்மனி மற்றும் யுஏஇ நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை Ex Oriente Lux AG வடிவமைத்து இயக்குகிறது. இதன் மூலம், மக்கள் எளிதாக கார்டைப் பயன்படுத்தி சிறிய தங்கக் கட்டிகள் அல்லது பிற தங்கப் பொருள்களை உடனடியாக பெற்றுக் கொள்ளவும், டெலிவரி செய்யவும் முடியும்.

இனி ஏடிஎம்-ல் பணம் மட்டுமல்ல.. தங்கமும் எடுக்கலாம்…! வந்தாச்சு கோல்டு ஏடிஎம்… Representative Image

இந்தியாவில் கோல்டு ஏடிஎம்

ஜெர்மனி, யுஏஇ-யைத் தொடர்ந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கோல்டு ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, ஐரோப்பா, வளைகுடா மற்றும் அமெரிக்காவில் சில நாடுகளில் தங்க ஏடிஎம்கள் இருப்பினும், கோல்ட்சிக்காவின் ஏடிஎம்கள் மட்டுமே, நிகழ்கால சந்தை நிலவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் படி, தற்போது கோல்ட்சிக்கா தங்கம் ஏடிஎம் இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் நிகழ்நேர தங்கம் வழங்கும் இயந்திரமாக, ஹைதராபாத்தில் கோல்ட்சிக்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்கும் இயந்திரம் ஆகும்.

இனி ஏடிஎம்-ல் பணம் மட்டுமல்ல.. தங்கமும் எடுக்கலாம்…! வந்தாச்சு கோல்டு ஏடிஎம்… Representative Image

கோல்ட்சிக்கா

இது குறித்து கோல்ட்சிக்கா நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்ததாவது, “ஏடிஎம்-ல் பணம் எடுப்பது போல இனி தங்கம் வாங்குவது எளிதாக இருக்கும். மக்கள் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால், அவர்கள் நகைக் கடைக்குச் செல்லாமல் ஏடிஎம் மூலமாகவே வாங்கலாம்.” எனத் தெரிவித்துள்ளது.

இனி ஏடிஎம்-ல் பணம் மட்டுமல்ல.. தங்கமும் எடுக்கலாம்…! வந்தாச்சு கோல்டு ஏடிஎம்… Representative Image

இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் குறித்த தகவல்கள்

கோல்ட்சிக்கா, இந்தியாவில் ஹைதராபாத்தைத் தளமாகக் கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனமான ஓபன் கியூப் டெக்னாலஜிஸின் தொழில்நுட்ப ஆதரவுடன் தனது முதல் தங்க ஏடிஎம்-களை பேகம்பட்டில் (Begumpet) தொடங்கியுள்ளது.

இது இந்தியாவின் முதல் தங்க ஏடிஎம் என்றும், உலகின் முதல் நிகழ்நேர தங்க ஏடிஎம் (Real Time Gold ATM) எனவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கோல்ட் ஏடிஎம் டிசம்பர் 5, 2022 ஆம் நாள் கோல்ட்சிக்கா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தங்க ஏடிஎம் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டு விளங்குகிறது. எளிமையாகப் பயன்படுத்தும் வகையிலும், முழு நேரம் அதாவது 24 x 7 நேரத்திலும் கிடைக்கும் வகையிலும் உள்ளது. மேலும், இதில் மக்கள் அவர்களுக்குத் தகுந்த பட்ஜெட்டிற்குள் தங்கத்தை வாங்கலாம்.

ஏடிஎம்-ல் பணம் எப்படி எளிதாக எடுக்குமாறு அமைகிறதோ, தங்க ஏடிஎம்களும் வாடிக்கையாளர்களை எளிதாக தங்கம் வாங்க அனுமதிக்கிறது. இதற்கு, மக்கள் தங்களுடைய டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் செய்து தங்கம் பெறலாம்.

எந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்தியும், தங்க ஏடிஎம்கள் மூலம் தங்கத்தை உடனடியாக வாங்க முடியும்.

தங்க ஏடிஎம்-களில் வாங்கப்படும் தங்கமானது, நேரடி விலையை அடிப்படையாகக் கொண்டு மக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் படி, இந்த தங்க ஏடிஎம்-களில் குறைந்தபட்சம் 0.5 கிராம் முதல் அதிகபட்சம் 100 கிராம் வரையிலான தங்கங்களைப் பெறலாம்.

இனி ஏடிஎம்-ல் பணம் மட்டுமல்ல.. தங்கமும் எடுக்கலாம்…! வந்தாச்சு கோல்டு ஏடிஎம்… Representative Image

தங்க ஏடிஎம்களை எப்படி பயன்படுத்தலாம்

பணம் எடுக்கும் ஏடிஎம்களைப் போலவே, தங்க ஏடிஎம்களும் செயல்படுத்தப்படுகின்றன.

தங்க ஏடிஎம்-ல் இருந்து, வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்க தங்களது டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தலாம்.

அதன் படி, பணம் எடுப்பதற்கு செய்கின்ற படி, தங்க ஏடிஎம்-ல் டெபிட்/ கிரெடிட் கார்டை ஏடிஎம்-ல் செலுத்த வேண்டும்.

பின், அதில் கார்டின் பின் எண்ணை (PIN Number) உள்ளிட வேண்டும்.

அதன் பிறகு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான தங்க நாணயங்களின் மதிப்பை உள்ளிட வேண்டும்.

பிறகு, இயந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயங்கள் கிடைக்கும்.

இவ்வாறு ஏடிஎம்-ல் பணம் எடுப்பது போல, தங்க நாணயங்களையும் பெறலாம். இது மக்களுக்கு எளிமையாகப் பயன்படுத்தும் முறையிலேயே அமைந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை