Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஒரே நாள்ல இவ்ளோ விலை அதிகமா..? நகை வாங்க கடைக்குப் போகாதீங்க மக்களே

Gowthami Subramani September 23, 2022 & 10:45 [IST]
ஒரே நாள்ல இவ்ளோ விலை அதிகமா..? நகை வாங்க கடைக்குப் போகாதீங்க மக்களேRepresentative Image.

தங்கத்தின் விலை சரிந்து கொண்டே சென்ற நிலையில், தற்போது ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்ததால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே சரிந்து, பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கத்தின் விலை, இன்று பெண்களை சிந்திக்க வைத்துள்ளது.

இன்றைய அதாவது செப்டம்பர் 23 ஆம் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.15 அதிகரித்து, 4,690 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து 37,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5,092 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு 40,736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது. அதன் படி, ஒரு கிராமிற்கு 63.20 ரூபாய் காசுளாக உள்ளது. இதில் ஒரு கிலோ வெள்ளி விலை தற்போது 63.200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஏற்றம் அடைந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை