Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

தங்கம் விலை குறைஞ்சிடுச்சி… இன்னைக்கு தங்கம் வாங்கலாமா..?

Gowthami Subramani October 01, 2022 & 12:30 [IST]
தங்கம் விலை குறைஞ்சிடுச்சி… இன்னைக்கு தங்கம் வாங்கலாமா..?Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து, இன்று சரிந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களுடன் காணப்படுகிறது. அதன் படி, இன்றைய நிலவரத்தில் தங்கத்தின் விலை ரூ.7 குறைந்து காணப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 01 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.7 குறைந்து, 4,690 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.56 குறைந்து 37,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 5,092 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தூய தங்கம் (24 காரட்) ஒரு சவரனுக்கு 40,736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை நேற்று மாறாமல் இருந்த நிலையில், தற்போது கிராமுக்கு ரூ.50 காசுகள் உயர்ந்து ரூ.62-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து, 62,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட சிறிது குறைந்ததினால், இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை