Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

தீபாவளி டபுள் டமாக்காவா..? தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani October 12, 2022 & 11:00 [IST]
தீபாவளி டபுள் டமாக்காவா..? தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்தது. தங்கத்தின் விலை நேற்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகவே, தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு நாள்களாகவே, தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், நேற்றைய தினத்தை போலவே இன்றும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இருப்பினும், இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 11 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.10 குறைந்து, 4,730 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து 37,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64 நிர்ணயிக்கப்பட்டு கிலோவுக்கு ரூ.64,000 என விற்பனை செய்யப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை