Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மீண்டும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை… போச்சா.. இனிமே நகை வாங்க முடியாதா..?

Gowthami Subramani October 08, 2022 & 11:10 [IST]
மீண்டும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை… போச்சா.. இனிமே நகை வாங்க முடியாதா..?Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வந்தது. அந்த வகையில், நேற்று ரூ40 குறைந்த நிலையில், இன்று அதே 40 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகவே, தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே உள்ளது. இருப்பினும், இறக்கத்தை விட ஏற்றமே அதிக அளவில் இருக்கிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து சரிந்து கொண்டே வருவதால், தங்கத்தின் விலை மேலும் அதிகமாகும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 8 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.5 அதிகரித்து 4,840 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 38,720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று தங்கத்தின் விலை நேற்று குறைந்த போது, வெள்ளி விலை அதிகமானது. ஆனால், இன்று தங்கத்தின் விலை உயர்ந்து வெள்ளி விலை குறையத் தொடங்கியுள்ளது. அதாவது ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் குறைந்து, ரூ.66-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை