Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

அட தங்கத்தின் விலை இன்னைக்கும் சரிவு… எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani November 08, 2022 & 10:50 [IST]
அட தங்கத்தின் விலை இன்னைக்கும் சரிவு… எவ்வளவு தெரியுமா..?Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, நேற்றைய விலையைத் தொடர்ந்து, இன்றும் சரிந்துள்ளதால், இல்லத்தரசிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சரிவடைந்துள்ளதால், இல்லத்தரசிகளுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.38,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 08 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.17 குறைந்து ரூ.4,758 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.136 குறைந்து 38,064 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,160 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.41,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை