ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் ஏறுவதும், இறங்குவதுமாகவே இருந்தது. அதன் படி, நேற்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை குறைந்து குறைந்துள்ளது
தீபாவளியை ஒட்டி, தங்கத்தின் விலை தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை தங்கத்தின் விலை அதிகரித்தது. இதனால், கவலையில் இருந்த நகை பிரியர்களுக்கு நேர்றைய நாளைத் தொடர்ந்து இன்றும் மகிழ்ச்சி தரும் வகையில் தங்கத்தின் விலை ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஏற்ற இறக்கத்திலேயே சென்ற தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து காணப்படுகிறது. இது இல்லத்தரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தினத்தில் அதாவது அக்டோபர் 15 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.45 குறைந்து, 4,690 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.360 குறைந்து 37,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 பைசாக்கள் குறைந்து 60.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.1,800 குறைந்து ரூ.60,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…