Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு.... நகை வாங்க முடியுமா…?

Gowthami Subramani November 11, 2022 & 11:30 [IST]
ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு.... நகை வாங்க முடியுமா…?Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, கடந்த சில நாள்களாகவே அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் வருத்தத்தில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை, அதிகரித்ததைத் தொடர்ந்து, இன்றும் அதிகரித்துள்ளதால் நகை வாங்குபவர்கள் கவலையில் உள்ளனர்.

கடந்த 10 நாள்களில், தங்கத்தின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. அதன் படி, ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) ஒரு சவரனுக்கு 10 நாள்களில் 1,072 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் 440 ரூபாய் உயர்ந்துள்ளது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 11 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,820 லிருந்து 4,875 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40 அதிகரித்து 38,560 ரூபாயிலிருந்து ரூ.39,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,257 க்கும் ஒரு சவரனுக்கு ரூ.42,056-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 பைசா சரிந்து ரூ.67.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை