Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி…! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி…

Gowthami Subramani November 21, 2022 & 11:50 [IST]
பெண்களுக்கு இன்ப அதிர்ச்சி…! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி… Representative Image.

ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இண்று குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் ஆனந்தத்தில் உள்ளனர்.

கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, கடந்த வாரம் தொடக்கத்தில் கடும் ஏற்றத்திலேயே இருந்து வந்தது. இருப்பினும், கடந்த வாரத்தின் இறுதி தினம் முதலே தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாகவே, தொடர்ந்து சரிந்து வந்துள்ளது.

ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.39,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 21 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.4,925 லிருந்து 4,920 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.40 குறைந்து 39,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,327-லிருந்து 5,322 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு ரூ.42,616-லிருந்து 42,576 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்த நிலையில், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து ரூ.66.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை