Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

என்னங்க ஃபிளிப்கார்ட், அமேசான்..! பெருசா இறக்கிருக்காங்க கவர்ன்மெண்ட்டு...!

UDHAYA KUMAR October 04, 2022 & 18:22 [IST]
என்னங்க ஃபிளிப்கார்ட், அமேசான்..! பெருசா இறக்கிருக்காங்க கவர்ன்மெண்ட்டு...!Representative Image.

 ஃபிளிப்கார்ட், அமேசான் மாதிரியே ஆன்லைன்ல பொருள் விக்குற வெப்சைட்ட அரசாங்கமே எடுத்து நடத்துது. இது பெங்களூர்ல அதிகாரப்பூர்வமா பயன்பாட்டுக்கு வந்துருக்குது. 

இந்திய இ-காமர்ஸ் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம்தான் ONDC இது முழுக்க முழுக்க இந்தியாவில், சிறு, குறு வணிகர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஆன்லைன் வர்த்தகத் தளம். 

ONDC நிறுவனம் வளர வளர இந்திய சந்தையில்,  அமேசான், பிளிப்கார்ட் போன்ற தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைக்கும். இந்தியாவிலுள்ள சிறு நிறுவனங்களும், விற்பனையாளர்களும் அதிகப்படியான லாபம், வருவாய், வர்த்தகத்தைப் பெறுவார்கள். 

பெங்களூர் நகரில் இந்த திட்டம் தற்போது செயலுக்கு வந்துள்ளது.  பையர் ஆப் மூலம் நமக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். தற்போதைக்கு,  மைஸ்டோர், பேடிஎம், ஸ்பைஸ்மனி ஆகியவை பையர் ஆப்களாக ONDC இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.  மளிகை பொருட்கள் முதல் உணவுகள் வரை ஆர்டர் செய்யமுடியும். 

பெங்களூர், போபால், ஷில்லாங், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக 100 நகரங்களுக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். தற்போது பீட்டா டெஸ்டிங் பெங்களூரில் நடத்தப்பட்டுள்ளது. 

ONDC தளத்தில் சுமார் 20 நிறுவனங்கள் 255 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, யூகோ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பாங்க் ஆஃப் பரோடா ஆகியவை முதலீடு செய்துள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்