Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்… நீங்களும் சொந்த வீடு கட்டலாம்..

Gowthami Subramani [IST]
பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்… நீங்களும் சொந்த வீடு கட்டலாம்..Representative Image.

மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கான கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் நாள், பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகும்.

நாட்டின் நகர்ப்புற பகுதிகளில் உள்ள ஏழை எளிய வீட்டு வசதி இல்லாத மக்களுக்கு உதவும் வகையில் வீடு கட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி, பொதுமக்களுக்கு அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றவாறு அமையும் கான்கிரீட் வீடுகளை கட்டிக் கொடுப்பதாகும். கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்ட சமயத்தில் 100 லட்சம் வீடுகளை கட்டுவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

திட்டமிட்டதைத் தாண்டி

ஆனால், பிரதமரி வீடு கட்டித் தரும் திட்டம் 100 லட்சத்தையும் தாண்டி, 102 லட்சம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அல்லது கட்டப்பட்டு வரப்படுகிறது.

இதில், 62 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 40 லட்சம் வீடுகளுக்கான பரிந்துரைகள் தாமதாக வந்தது. இவற்றை கட்டி முடிப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது. அதன் படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அறிவுரைகளையும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் படியும், இந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் படி, பிரதான் மந்திரியின் இந்த திட்டத்தை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப் போவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

விடுவிக்கப்படும் தொகை

முன்னரே, 2004-2014 கால கட்டத்தில் வீட்டு வசதிக்கென ரூ. 20,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 2015 ஆம் ஆண்டில் பிரதமரின் இந்த வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்ட பிறகு ரூ.2.03 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை மத்திய அரசின் உதவித் தொகை அல்லது மானியத் தொகையாக ரூ.1.18 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

PM Awas Yojana 2022 List | PM Awas Yojana 2022 Apply Online | PM Awas Yojana 2022 2023 | Pmayg nic in 2022 | Pradhan Mantri Awas Yojana List | Pradhan Mantri Awas Yojana Eligibility | Pradhan Mantri Awas Yojana Status | Pradhan Mantri Awas Yojana 2022 Online Application | Pradhan Mantri Awas Yojana 2022 List | Pradhan Mantri Awas Yojana 2022-23 | Pradhan Mantri Awas Yojana 2022 to 2023 | Pradhan Mantri Awas Yojana 2022 Eligibility | Pradhan Mantri Awas Yojana 2022 List Tamilnadu | Pradhan Mantri Awas Yojana 2022 Tamilnadu | Pradhan Mantri Awas Yojana 2022 last date | Pradhan Mantri Awas Yojana 2022 up | mp Pradhan Mantri Awas Yojana 2022 | Gramin Pradhan Mantri Awas Yojana 2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்