How to Complaint about Power Outages: மின் தடை மற்றும் மின்சாரம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறை தீர்க்கும் அரசு
தமிழக அரசு, தற்போது பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களை மக்களின் நலனுக்காக நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. மேலும், இன்னும் சில துறைகளில் உள்ள குறைகளை அரசு சார்பில் தீர்ப்பதற்கான அனைத்து வழியான நடைமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது, தமிழகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்த குறை தீர்க்கும் செயல்பாட்டு அமைப்பு, பல விவரங்களை வெளியிடப்பட்டு வருகிறது.
மின் உற்பத்தி கழகம்
இவ்வாறு தமிழகத்தில் ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கீழ் மின் நுகர்வோரின் குறை தீர்க்கும் மன்றம் பற்றிய விவரங்களை பொது மக்களுக்கு பரப்புவதற்காக மின் உற்பத்தி கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது (How to Complaint about Power Outages).
அவசர அழைப்பு
பொது மக்கள், தங்களின் ஏரியாவில் ஏற்படும் மின் தடைக்கு யாரிடம் அதைப் பற்றிக் கேட்பது என்ற குழப்பத்தில் இருப்பர். அவர்களுக்கு உதவும் வகையிலே தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி, தமிழகத்தில் பொதுவான மின்தடை, தனி நபர் மின் தடை அல்லது அவசர அழைப்புகளுக்கு பொதுமக்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகம், மின் நுகர்வோர் அழைப்பு மையமான “மின்னகத்தை” அனுகலாம் (TNEB Complaint Number for Power Cut). இது 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அதன் படி, மின்னகத்தை 94987 94987 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு மக்கள் தங்களுடைய புகார்கள் மற்றும் குறைகளைத் தெரிவிக்கலாம்.
இந்த வகை பழுதுகளுக்கு
மின் மாற்றி, மின் கம்பம், தெருவிளக்குப் பெட்டி, மின் அளவி பழுது, போன்றவற்றிற்கான புகார்களை மின் இணைப்பு சம்பந்தப்பட்ட புகார்களை மின் நுகர்வோர் அழைப்பு மையத்தை அணுகலாம். அதன் படி, மின் சார்ந்த பிரச்சனைகளை 94987 94987 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நுகர்வோர்கள் புகார்களை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தினுடைய வலைத்தள பக்கமான www.tangedco.gov.in என்ற இணையதளப்பக்கத்தில் பதிவு செய்யலாம் (TNEB Power Cut Complaint Online).
புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால்
நுகர்வோர்கள், அவர்களின் மின் சார்ந்த புகார்களை சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்யலாம். அதன் பிறகும், புகார்கள் தீர்க்கப்படாத சமயத்தில் அதற்கு அடுத்த கட்டமாக செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர்களை அணுகலாம். குறை தீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் அனைத்து கோட்ட அலுவலகத்திலும் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டத்தில், குறைகள் மேற்பார்வை பொறியாளரிடம் சமர்ப்பிக்கப்படும் (TANGEDCO Compliant).
மேல்முறையீடு செய்தல்
குறைகளைச் சமர்ப்பித்தும் தீர்க்கப்படவில்லை எனில், மேல் முறையீடு செய்யலாம். அதாவது மன்றம் குறைகளை தீர்க்கவில்லை என்றாலோ, மன்றத்தின் ஆணையில் நுகர்வோர் திருப்தி பெறவில்லை என்றாலோ, முப்பது நாட்களுக்குள் எந்த வித திருப்திகரமான நிலையைப் பெறாத சமயத்தில் ஒழுங்கு முறை ஆணைய அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ள மின்சார குறை தீர்ப்பாளரிடம் மேல் முறையீடு செய்யலாம் (How to Get Power Cut Compliant Number).
இது சம்பந்தபட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் மற்றும் செயல்பாட்டு முறைகளின் விவரங்கள் மற்றும் நுகர்வோர்களின் வழிகாட்டுதலுக்காக முறைகள் www.tnrec.gov.in என்ற தளத்தில் உள்ளது.
பழுதடைந்த மின்கம்பம்
திறந்த நிலையில் சேதமடைந்த தெருவிளக்குப் பெட்டி, தொங்கிக் கிடக்கும் மின்கம்பிகள், சேதமடைந்த மின் கம்பம், போன்ற வெளியில் தெரியும் அபாயகரமான மின் ஒயர்கள், மற்றும் மின் அமைப்பிலுள்ள பழுதுகள் போன்றவற்றை, நுகர்வோர்கள், தங்களது கைபேசியின் மூலம் போட்டோடு எடுத்து வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம். அதன் படி, ஒவ்வொரு மாவட்டத்திற்குமான வாட்ஸ்-அப் எண்கள் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளன (Power Cut Compliant Number).
மாவட்ட வாரியாக உள்ள குறைதீர்க்கும் தொலைபேசி எண்கள்
சென்னை – 9445850829
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் – 9444371912
சேலம், ஈரோடு, நாமக்கல் – 9445851912
கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி - 9442111912
திருநெல்வேலி, கன்னியாக்குமரி, விருதுநகர், தூத்துக்குடி – 8903331912
மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை – 9443111912
வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி – 6380281341
அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர் – 9486111912
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை – 9445855768
மேலே கூறப்பட்ட எண்களைப் பயன்படுத்தி, அந்தந்த பகுதியில் இருக்கும் நுகர்வோர்கள், குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…