நாம் முன்பே பார்த்தது போல வீட்டுக் கடன் வாங்கும் போது நமக்குத் தேவையான தொகையை முழுவதுமாக எந்த ஒரு வங்கியும், நிதி நிறுவனமும் அல்லது வீட்டு வசதி நிறுவனமும் தருவதில்லை. அதாவது வீட்டுக் கடனுக்கான தொகை அதிகரிக்க கடன் தருபவர்கள் சதவீதத்தை குறைத்துக் கொண்டு வருவார்கள். புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், இப்போது நம்முடைய வீட்டுக் கடன் ரூ.30 லட்சம் என்று இருந்தால் கடன் தரும் வங்கி அல்லது மற்ற நிறுவனங்கள் அந்த தொகையில் 80% கடனாக தருவார்கள். இதுவே கடன் தொகை அதிகமாக இருந்தால் அதாவது ரூ. 50 லட்சத்திற்கும் மேலாக இருந்தால் அதில் இருந்து 75% மட்டுமே கடனாக தரப்படும். மீதமுள்ள பணத்தை நாம் தான் செலுத்த வேண்டி இருக்கும்.
Representative Image
எனவே, அதிக கடன் தொகை கிடைக்க சில வழிகள் உள்ளது. அதனைப் பின்பற்றி நீங்கள் பயன்பெறலாம்.
- முதலில் நம்முடைய கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்க வேண்டும். இதற்கு முன் வாங்கிய கடனை சரியான நேரத்தில் செலுத்தி இருந்தால் கிரெடிட் ஸ்கோர் சரியாக இருக்கும். மேலும் அப்படி இருந்தால் வட்டியும் குறையும், கடன் தொகையும் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் வேலை செய்பவர்களுடன் இணைந்து கடன் வாங்கினால், அதிக தொகை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் மாத தவணை மற்றும் கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசமும் குறையும். சீக்கிரம் கடனை அடைத்து விடலாம். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், வீட்டுப் பெண்கள் கடன் வாங்கும் போது 0.05% வட்டியில் தள்ளுபடி கிடைக்கும்.
- சில வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வீட்டுக் கடனை திரும்ப செலுத்தும் காலத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் தொகையையும் அதிகமாக தர சம்மதிக்கின்றனர்.
- உங்களுக்கு அல்லது உங்களுடைய குடும்பத்தில் எந்தெந்த வழிகளில் வருமானம் வருகிறதோ அந்த அனைத்து ஆவணங்களையும் தாருங்கள். வேலையும் செய்யும் இடத்தில் சமபளம், போனஸ், ஊதிய உயர்வு, வீட்டு வாடகை, முதலீடு என்று அனைத்தையும் வீட்டுக் கடன் வாங்கும் போது சமர்ப்பிக்கலாம். இதுவும் கடன் தொகையை அதிகரிக்க உதவும்.
Representative Image
இதைத் தவிர இதில் இருக்கும் சிக்கல்கள் என்ன என்று பார்க்கலாம்.
- பொதுவாக கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் சொத்தின் பத்திர பதிவு, முத்திரைத் தாள், ஆவணங்கள் என்று தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இதனை வீட்டுக் கடன் வாங்கும் போது நாம் தர வேண்டிய டவுன் பேமெண்ட் உடன் ரெடியாக வைத்துக்கொள்வது நல்லது. இது வீட்டுக் கடன் வாங்கும் சதவீதத்தில் இந்த கட்டணங்கள் சேர்க்கப்பட மாட்டாது. அப்படி ஒருவேளை சேர்க்கப்பட்டால் அது கடன் தொகையை குறைக்க காரணமாக அமைந்து விடும். எனவே, தெளிவாக கேட்டு வீட்டுக் கடன் வாங்குங்கள்.
- மேலும் சில பில்டர் அல்லது ப்ரோமோட்டர்கள் வீட்டுக் கடனுக்கு தேவையான 100% தொகையையும் நாங்களே தருகிறோம் என்று கூறினால் அதை மட்டும் நம்பி விடாதீர்கள். ஏனெனில் இது உங்களுக்கு டபுள் செலவை இழுத்து விட்டுவிடும். ஆகவே வீட்டுக் கடன் வாங்கும் போது உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…