Mon ,May 29, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐபிஎம்… சிக்கலில் ஐபிஎம் நிறுவனம்.. காரணம் மூன்லைட்டிங்..!

Gowthami Subramani October 27, 2022 & 12:20 [IST]
ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐபிஎம்… சிக்கலில் ஐபிஎம் நிறுவனம்.. காரணம் மூன்லைட்டிங்..!Representative Image.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பமாக விளங்கும் ஐபிஎம் நிறுவனம், தனது இந்திய ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, ஊழியர்கள் மூன்லைட்டிங் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ளது. ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தை முடித்த பிறகு, மற்றொரு நிறுவனத்திற்காக வேலை செய்வது, ஐபிஎம் நிறுவனத்தில் சிக்கலை எழுப்புகிறது.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐபிஎம்… சிக்கலில் ஐபிஎம் நிறுவனம்.. காரணம் மூன்லைட்டிங்..!Representative Image

இவ்வாறு ஊழியர்கள் செய்வதால், ஐபிஎம் நிறுவனத்துக்கு பல்வேறு பிரச்சனைகள் எழும் என்றும், வாடிக்கையாளர்களின் தரவுகளுக்குச் சிக்கல் வருபவையாகவும் அமையும் எனவும் கூறப்படுகிறது. எந்தவொரு நிறுவனத்திலும் பணியாற்றிய பிறகு அவர்களுக்கான மீதி நேரம் அவர்களின் சொந்த நேரம் ஆகும். அதே சமயம், அவர்கள் மேற்கொள்ளும் சில வேலைகள் காரணமாக, நிறுவனத்திற்கு நேரடியாக பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐபிஎம்… சிக்கலில் ஐபிஎம் நிறுவனம்.. காரணம் மூன்லைட்டிங்..!Representative Image

இது குறித்து, ஐபிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக விளங்கும் சந்தீப் படேல், அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் அவர், ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட விஷயத்தில் கவனம் செலுத்தும் போது, நிறுவனத்துக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐபிஎம்… சிக்கலில் ஐபிஎம் நிறுவனம்.. காரணம் மூன்லைட்டிங்..!Representative Image

இவ்வாறு ஊழியர்கள் மூன்லைட்டிங் செய்வதன் மூலம், ஐபிஎம் வாடிக்கையாளர்களின் தரவுகள் உள்ளிட்ட பல தகவல்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஊழியர்கள் மூன்லைட்டிங் முறையில் வேலை பார்க்கும் போது, நிறுவனத்தின் தகவல்கள் வெளியே செல்ல வாய்ப்புள்ளது. எனவே, நிறுவனத்தின் ஊழியர்கள், ஒரு நிறுவனத்தில் மட்டும் பணியாற்ற வேண்டுமென்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது என ஐபிஎம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ஐபிஎம்… சிக்கலில் ஐபிஎம் நிறுவனம்.. காரணம் மூன்லைட்டிங்..!Representative Image

சர்வதேச அளவில், இயங்கி வரும் ஐபிஎம் நிறுவனத்தின் கிளைகளில் இந்தியாவில் மட்டும் 1,40,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மேலும், இந்தியாவில் தான் அதிக அளவிலான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியாவில் உள்ள ஐபிஎம் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 23,500 கோடி ரூபாயாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்