தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சீனியர் சிட்டிசன்களுக்கான ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டத்திற்கான காலத்தை அக்டோபர் 31 ஆம் நாள் வரை நீட்டித்துள்ளது. இதனால், இந்த மாத இறுதி வரையிலும் சீனியர் சிட்டிசன்கள் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி பயன்பெற முடியும்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கிய சமயத்தில், ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டங்கள், SBI, ICICI, HDFC உள்ளிட்ட வங்கிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டது.
பெரும்பாலும், சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டங்களிலேயே முதலீடு செய்து வருகிண்றனர். அந்த வகையில், பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும், சீனியர் சிட்டிசன்களுக்குக் கூடுதலாக சுமார் 0.50% வட்டி கூடுதலாக வழங்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு காலத்தில், ஃபிக்ஸ்டு டெபாசிட் வட்டி விகிதங்கள் குறைந்தது. இதனால், சீனியர் சிட்டிசன்களுக்காக சிறப்பு ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி, ஐசிஐசிஐ வங்கி கோல்டன் இயர்ஸ் ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ், சீனியர் சிட்டிசன்கள், பொது வாடிக்கையாளர்களைக் காட்டிலும், 0.60% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அக்டோபர் 7 ஆம் தேதியுடன் ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்திய ஐசிஐசிஐ கோல்டன் இயர்ஸ் ஃபிக்ஸ்டு டெபாசிட் திட்டத்தை வரும் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, மூத்த குடிமக்கள் தங்களது எதிர்கால நலனிற்காக அக்டோபர் 31 ஆம் தேதி வரை இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி பயன்பெறலாம் எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…