Tue ,Jan 31, 2023

சென்செக்ஸ் 59,330.90
-874.16sensex(-1.45%)
நிஃப்டி17,604.35
-287.60sensex(-1.61%)
USD
81.57
Exclusive

நவம்பர் 1 முதல் அறிமுகமாகும் டிஜிட்டல் ரூபாய் பைலட்… எந்தெந்த வங்கிகள் பங்கேற்கிறது தெரியுமா..?

Gowthami Subramani October 31, 2022 & 18:50 [IST]
நவம்பர் 1 முதல் அறிமுகமாகும் டிஜிட்டல் ரூபாய் பைலட்… எந்தெந்த வங்கிகள் பங்கேற்கிறது தெரியுமா..?Representative Image.

இந்திய ரிசர்வ் வங்கி நாளை முதல் சோதனை அடிப்படையில் மொத்த விற்பனைப் பிரிவில் டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் படி, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 9 வங்கிகள், இந்த சோதனை முயற்சியில் பங்கேற்க உள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது,“அரசு பாதுகாப்பில், இரண்டாம் நிலை சந்தைப் பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதே இந்த சோதனை முயற்சியின் நோக்கமாகும். மேலும் இந்த இ-ரூபாய், வங்கிகளுக்கு இடையேயான சந்தையை திறமையாக மாற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.

மேலும், மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயத்தின் தீர்வுகள், பரிவர்த்தனைக்கான செலவைக் குறைக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. எஸ்பிஐ வங்கியைத் தவிர, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹேந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, மற்றும் எச்எஸ்பிசி வங்கி போன்றவையும் இந்த சோதனையில் பங்கேற்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், சில்லறை விற்பனைப் பிரிவுக்கான இ-ரூபாய் அறிமுகம், அடுத்த ஒரு மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

சமீப காலமாக, ஆர்பிஐ டிஜிட்டல் நாணயத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து வருகிறது. மேலும், இதனைப் படிப்படியாக செயல்படுத்துவதற்கான உத்தியை நோக்கிச் செயல்பட்டு வருவதாகவும் கூறியது.

கிரிப்டோகரன்சிகளின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் டிஜிட்டல் வடிவில் நாணயத்திற்கான ஆர்பிஐ'யின் திட்டங்கள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்