இந்தியா அரசு, நாட்டின் பாதுகாப்பு தளவாடங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. தற்போது மேலும் பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவிடம் இருந்து 3 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 24,500 ரூபாய் செலவில் 31 அதிநவீன ட்ரோன்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
ஆயுதமேந்திய எம்க்யூ- 9பி ட்ரோன்களை வாங்க கடந்த வாரம் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகலாம் எனக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக அமெரிக்கா இந்தியாவிற்கு ஆயுதம் இல்லாமல் 10 ட்ரோன்கள் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மே மாதம் இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்னை காரணமாக மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தியாவின் எல்லைப் பகுதியில் சீனா அதன் ராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக இந்திய-சீன எல்லையில் எப்போதும் பதற்றமான சூழல் நீடித்துவருகிறது. இதனால் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தன்னுடைய ராணுவக் கட்டமைப்பை பலப்படுத்தத் தொடங்கியுள்ளது.
கடற்பரப்பு, வான்பரப்பு, நிலப்பரப்பு என அனைத்துத் தளங்களிலும் பாதுகாப்பு அம்சங்களையும் இந்தியா நவீனப்படுத்தி வருகிறது. இதற்காக அமெரிக்கா வசம் இருந்து எம்க்யூ - 9 பி எனும் அதிநவீன ட்ரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது உலக நாடுகளை உற்றுப்பார்க்கச் செய்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து ட்ரோன்கள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும்பட்சத்தில், முதற்கட்டமாக 10 ட்ரோன்கள் ஆயுதமில்லாமல் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 31 ட்ரோன்களில் 15 ட்ரோன்கள் கடல் பரப்பைக் கண்காணிக்கவும், 16 ட்ரோன்கள் நிலப்பரப்பைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…