Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

பிளாஸ்டிக்கில் இருந்து சீருடை… இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்…!

Gowthami Subramani November 18, 2022 & 15:10 [IST]
பிளாஸ்டிக்கில் இருந்து சீருடை… இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்…!Representative Image.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமையும் பிளாஸ்டிக்கிலிருந்து, சீருடை தயாரிக்கும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிளாஸ்டிக்கில் இருந்து சீருடை… இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்…!Representative Image

பிளாஸ்டிக் தீமைகள்

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள்களும் பெரும்பாலும் பிளாஸ்டிக்குகளாகவே இருந்தன. பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவு தீங்கானது என்பதும் பொதுவாக எல்லோரும் அறிந்த ஒன்றே. இருப்பினும், பிளாஸ்டிக் பயன்பாடுகள் உபயோகிப்பதை மக்கள் நிறுத்தவில்லை. பிளாஸ்டிக்கை எரிப்பதால் வரும் புகை, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துமாறு அமைகிறது.

பிளாஸ்டிக்கில் இருந்து சீருடை… இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்…!Representative Image

மறுசுழற்சிக்கான ஏற்பாடு

இதன் காரணமாக, மத்திய அரசு பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வந்தன. அதில் முதல் செயலாக, பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதுடன், பிளாஸ்டிக் உற்பத்தியையும் தடை விதித்து உத்தரவு அளித்தது. இந்நிலையில், எனவே, மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த வகையில் குறைக்கவும், தற்போது பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன.

பிளாஸ்டிக்கில் இருந்து சீருடை… இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்…!Representative Image

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய திட்டம்

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனம் புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன் படி, 20 மில்லியன் அளவிலான பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து, அவற்றை பாலிகாட்டனாக மாற்றம் செய்வதுடன், இதில் இருந்து சீருடைகளைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனமானது, சுற்றுச்சூழலை காப்பதற்கும், மாசுபாட்டை ஒழிக்கவும் உறுதி கொண்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

பிளாஸ்டிக்கில் இருந்து சீருடை… இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்…!Representative Image

Go Green வாசகம்

பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் உடைகளை இந்தியன் ஆயில் நிறுவனமானது பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் டெலிவரி பணியாளர்களுக்கு வழங்குவதாக திட்டமிட்டுள்ளது. இந்த சீருடைகளில் Go Green என்ற விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் பெட்ரோல் நிலையங்கள் மற்றும் இதர அமைப்புகளிடம் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக்கை, பருத்தி சேர்த்து மறுசுழற்சி செய்யப்படும். இதில் இருந்தே பாலிகாட்டன் சீருடை தயாரிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிளாஸ்டிக்கில் இருந்து சீருடை… இந்தியன் ஆயில் நிறுவனத்தின் அசத்தல் திட்டம்…!Representative Image

2046 ஆம் ஆண்டுக்குள் ஜூரோ

இது குறித்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவரான எஸ்.எம்.வைத்தியா குறிப்பிட்டதாவது,”அதிக அளவில் கார்பம் வெளியேற்றக் கூடியதாக அமைவது கச்சா எண்ணெய் தொழில்துறை ஆகும். இந்தத் தொழிலின் இயல்பே கார்பனை வெளிவிடுவதாகும். அதே சமயம், இந்திய ஆயில் நிறுவனமானது வரும் 2046 ஆம் ஆண்டுக்குள் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டை ஜூரோ நிலைக்குக் கொண்டு வர உறுதி செய்துள்ளது.

மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த சீருடைகளாகவே, இந்தப் பசுமை இலக்கு பிரதிபலிப்பாக அமையும். மேலும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் ஒரு புதிய வாய்ப்புகளுக்கான கதவாக மாறுகின்றன என்பதற்கு இந்த சீருடை உற்பத்தி நல்ல எடுத்துக்காட்டு ஆகும்” எனத் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்