சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குனரான பாலோ மௌரோ, இந்தியாவின் பணப் பரிமாற்றத் திட்டங்களைப் பாராட்டியுள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். நாம் எங்கு சென்றாலும், தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள சிறிய கடை முதல் மால் உட்பட பல்வேறு இடங்களில் நாம் டிஜிட்டல் பரிமாற்ற முறையையே பயன்படுத்தி வருகிறோம். அதே சமயம், இந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் மூலம், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு அதிக தொகை பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு, இன்னும் பழைய நிலைமைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்துமே பொருளாதார வீழ்ச்சியை வரும் 2023 ஆம் ஆண்டில் சந்திக்க போவதாக சர்வதேச நாணய நிதி வெளியிட்டுள்ளது. அவ்வாறே, சமீப காலமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் துணை இயக்குநராக விளங்கும் பாவ்லோ மௌரோ, இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிமாற்றத் திட்டத்தைக் குறித்து பேசினார். மேலும், இது லாஜிஸ்டிக் அற்புதம் என்றும், குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கு உதவுவதுடன், கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைவதாக உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பாவ்லோ மௌரோ கூறியதாவது, “இந்தியாவின் இந்த திட்டம் சுவாரசியமாக உள்ளது. இது குறைந்த வருமானத்தில் உள்ள மக்களுக்கும், நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களைச் சென்றடையக் கூடியதாகவும் இருக்க எப்படி முயல்கின்றன” என்று பாவ்லோ கூறினார்.
மேலும், இவர் நிறுவனங்கள் எவ்வாறு பணப்பரிமாற்றங்களை பயன்படுத்துகின்றன என்பதற்கு உலகளாவிய கடன் வழங்குநரிடம் பல்வேறு எடுத்துக்காட்டுகள் உள்ளன. மேலும், “இந்தியாவில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது” என்று கூறினார்.
சர்வதேச நாணய நிதி மற்றும் உலக வங்கி குழுமத்தின் ஆளுநர்கள் குழுவின் வருடாந்திர கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் மௌரோ இவ்வாறு பேசினார்.
கடந்த செவ்வாயன்று ஐஎம்எஃப், “முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையை கட்டுப்படுத்தியுள்ளது. இது நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஆர்பிஐ-ஆல் எடுக்கப்பட்டதாகும்” என்று பாராட்டியுள்ளது.
மேலும், இது குறித்து பணவியல் மற்றும் மூலதனச் சந்தைத் துறையின் துணைப் பிரிவுத் தலைவரான கார்சியா பாஸ்குவல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,”இலக்கை விட பணவீக்கம் அதிகமாக இருப்பதால், அதனை எதிர்த்துப் போராட ரிசர்வ் வங்கி சரியான முறையில் இறுக்கமாக உள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து நிர்வாகம் நன்றாக இருப்பினும், 190 அடிப்படைப் புள்ளிகள் விகித உயர்வை வழங்குகிறது. மேலும், பணவீக்கத்தை இலக்குக்குக் கொண்டு வர மேலும் இறுக்கம் தேவை” என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…