Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 73,399.78
-845.12sensex(-1.14%)
நிஃப்டி22,272.50
-246.90sensex(-1.10%)
USD
81.57
Exclusive

அதிரடியாகக் குறைந்த சிலிண்டர் விலை….! எவ்வளவு தெரியுமா..?

Gowthami Subramani September 02, 2022 & 12:50 [IST]
அதிரடியாகக் குறைந்த சிலிண்டர் விலை….! எவ்வளவு தெரியுமா..?Representative Image.

இன்று சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன் படி, கடந்த 5 மாதங்களில் ஐந்தாவது முறையாக, சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை நிர்ணயித்து வருகிறது. அதன் படி, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே, அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போரின் விளைவாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் காரணமக, பெட்ரோல், டீசல், சமையல் மற்றும் வணிக சிலிண்டர் எரிவாயுவின் விலை பன்மடங்கு உயர்ந்து காணப்பட்டது. அதன் பிறகு, தற்போது கடந்த ஐந்து மாதங்களாக, கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் அனைத்திற்கும் விலை குறைந்து வருவதைக் காணலாம்.

அதன் படி, இன்றைய நிலவரத்தின் படி வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரில் விலை ரூ.96.00 குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இதன் விலை ரூ.2,141-ல் இருந்து, ரூ.2,045 ஆகக் குறைந்துள்ளது. விலை நிர்ணயம் படி, வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 5 ஆவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டில் பயன்படுத்தும் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இருந்தபோதிலும், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள், வீட்டு உபயோகச் சிலிண்டரின் விலையையும் குறைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Cylinder Rate Decreases Today in Tamil | Cylinder Rate Today in Tamil | Cylinder Price Updated News | Cylinder Rate Today | Cylinder Rate Update News | Cylinder Rate Today News | Cylinder Rate Update News


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்