ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி மாதம் 1 ஆம் நாள் நடைபெறும். இதில், வருமான வரி, சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட தகவல்களைப் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். மேலும், மக்களின் நலனுக்காக புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
பெண்களின் நிதி சுதந்திரத்தை மையமாக வைத்தே, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களுக்கான புதிய சேமிப்புத் திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளார். இந்த திட்டமானது “மஹிளா சம்மன் பச்சத் பத்ரா” என அழைக்கப்படுகிறது. மேலும், இந்த திட்டமானது 2023 முதல் மார்ச் 2025 வரை என இரண்டு நாள்கள் நீடிக்கும். இந்த திட்டத்தின் மூலம், பெண்களுக்கு ஃபிக்ஸ்டு டெபாசிட் வட்டியை விட அதிக வட்டியாக 7.5% நிலையான வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
பெண்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டமானது, பொருளாதார வலுவூட்டலின் அடுத்த கட்டத்தை எட்டுவதற்காக கொண்டுவருவதற்காக அமல்படுத்தப்பட்டதாகும். இந்த வரவு செலவு திட்டத்தின் மூலம், நகர்ப்புற பெண்கள் முதல் கிராமப்புற பெண்கள் வரை அனைவரும் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதாக அமையும்.
மேலும், பெண்களுக்காக அமல்படுத்தப்பட்ட இந்த திட்டமானது, ஃபிக்ஸ்டு டெபாசிட் முதலீட்டில் தருவதை விட அதிகமான வட்டி விகிதத்தில் இந்த திட்டம் அமைகிறது.
இந்த சிறப்பு திட்டமான மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் மூலம் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் சேர்ந்து பயன்பெறலாம். அதாவது இந்த திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மேலும், இந்த சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 7.5% என்ற நிலையான வட்டி விகிதம் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்படும்.
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது ஒரு குறிப்பிட்ட கால அளவைக் கொண்டுள்ளது. இந்த திட்டமானது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும். இந்த 2023 ஆம் ஆண்டு முதல் மார்ச் 2025 ஆம் ஆண்டு வரை திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இதில் முதலீடு செய்து, பெண்கள் தங்களுக்கான சிறப்பான சேமிப்புத் திட்டத்தை உருவாக்குவதுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…