Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Netflix Employee Quits Job: 3.5 கோடி ரூபாய் சம்பள வேலையை ராஜினாமா செய்த ஊழியர்…! அதுக்கு ரீசன் என்ன தெரியுமா..? கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க…

Gowthami Subramani June 07, 2022 & 11:30 [IST]
Netflix Employee Quits Job: 3.5 கோடி ரூபாய் சம்பள வேலையை ராஜினாமா செய்த ஊழியர்…! அதுக்கு ரீசன் என்ன தெரியுமா..?  கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க…Representative Image.

Netflix Employee Quits Job: மிகப் பிரபலமான ஆன்லைன் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் நிறுவனத்தில் பணி புரிந்த ஊழியர் ஒருவர் பணியை விட்டு விலகியது குறித்த தகவல்கள் பரவி வருகின்றன.

பிரபல ஓடிடி தளம்

ஓடிடி தளத்தில் மக்களை ஈர்க்கும் வகையில், திரைப்படங்கள், வெப் சீரியல்கள் மற்றும் இன்னும் சில சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் வெளியாகி வருகின்றன. ஆனால், சமீப காலமாக, இந்த நெட்பிளிக்ஸில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன (Netflix Employee News).

A picture containing text

Description automatically generated

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்

அண்மையில் பல்வேறு நிறுவனங்கள், நிறைய ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. அதன் படி, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும், மறு சீரமைப்பு பணி காரணமாக 150 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக, இந்த நிறுவனம் தொடர்ந்து குறைந்து வரும் வருமய் நிலை காரணமாகவும் பணியாட்களை நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்ததிருந்தது (Netflix Employee Quits Job).

சர்ச்சையில் நெட்ஃப்ளிக்ஸ்

இந்த சூழ்நிலையில், நெட்பிளிக்ஸில், டெவ் சேப்பலின் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மூன்றாம் பாலினத்தவர்களைக் கேலி செய்யும் விதமாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் மட்டும் அல்லாமல், அந்த நிறுவனத்தின் ஊழியர்களிடமிருந்தும் எதிர்ப்புகள் வந்தன. இதனைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்தது. ஆனால், இதற்கு எதிர்ப்புகள் வந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாக்கப்படும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வுக்குப் பின் ஊழியர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தது. அது மட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் வசதி வாடிக்கையாளர்களுக்கு உள்ளது (Emloyee Quits 3.5 Crore Salary Job).

A picture containing text

Description automatically generated

தாராளமாக வெளியேறலாம்

மேலும், நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஊழியர்களிடம் தெய்வித்ததாவது, எங்களுடன் இணைந்து பணியாற்றக்கூடிய கலைஞர்களின் கலை ஆற்றலை ஆதரிக்கிறோம். எனவே, எங்களுடன் சேர்ந்து பணி செய்ய விரும்புபவர்கள் பணி புரியலாம். விருப்பம் இல்லாதவர்கள், தாராளமாக வெளியேறிக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது (Netflix Latest News).

போர் அடிக்குது

இது போன்ற பல சர்ச்சைகளுக்கு இடையில், இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார். ஆனால், இதற்கு அவர் கூறிய காரணமே வேறு. சீன நாட்டைச் சேர்ந்த மைக்கேல் லின் என்ற பொறியாளர் இப்படி ஒரு காரணத்தைக் கூறி வெளியேறி இருக்கிறார். அது என்ன காரணம் தெரியுமா? செய்யும் வேலையில் போர் அடிக்குது என்று கூறி வேலையைத் தூக்கி எறிந்துள்ளாராம்.

A person smiling for the camera

Description automatically generated with low confidence

இது குறித்து அவர் கூறியதாவது, நெட் பிளிக்ஸ் நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக ஆண்டுக்கு 4.5 லட்சம் டாலர்கள் சம்பளத்தில் பணிபுரிந்து வந்தேன். இலவச உணவு, அதிக சம்பளம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை என அனைத்தும் எனக்கு கிடைத்தது. ஆனால், அந்த வேலை எனக்கு போர் அடித்ததால் வேலையை விட்டு நின்று விட்டேன் எனக் கூறியுள்ளார். இவர் கூறிய பதிலால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

எதிர்ப்புகளை மீறி

இவர் எம்பிஏ படிக்கும் போதே இந்தப் பணியில் நிறைய கற்றுக் கொண்டதாகக் கூறினார். மேலும், எம்பிஏ படித்துக் கொண்டிருக்கும் போது, கேஸ்டடியில் வேலை செய்து அதிலும் நிறைய சம்பளத்தைப் பெற்றுள்ளார். தினமும் தான் நிறைய கற்றுக் கொண்டதாக தெரிவித்த அவர், கொரோனா காலத்தில் சமூகமயமாக்கல், ஊதியம், வேலை என முடிவுக்கு வந்தது. அதன் பிறகு, போர் அடிக்கத் தொடங்கியதால், வேலையை ராஜினாமா செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Graphical user interface, website

Description automatically generated

வேலை கிடைக்குமா என்று நாள்தோறும் எண்ணிப்பார்க்கும் சிலரின் மத்தியில், இந்த இளைஞர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்