Thu ,Dec 07, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

New Salary Act of Employees: இனி PF உயரும்… Take Home Salary அதிகமாகும்… வரவிருக்கும் புதிய சட்டத்தால் இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?

Gowthami Subramani June 10, 2022 & 17:30 [IST]
New Salary Act of Employees: இனி PF உயரும்… Take Home Salary அதிகமாகும்…  வரவிருக்கும் புதிய சட்டத்தால் இன்னும் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?Representative Image.

New Salary Act of Employees: இந்திய அரசு, ஊழியர்களுக்கான புதிய ஊதிய சட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஊதிய சட்டத்தால், நிறைய மாற்றங்கள் ஏற்படும் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதிய ஊதிய சட்டம்

புதிய ஊதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கு, இந்திய அரசு பெரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் மூலம், ஊழியர்களினுடைய சம்பள அமைப்பில் மாறுபாடுகள் நிகழும்.

ஒரு ஊழியருக்கான மொத்த சம்பளம், பல்வேறு பிரிவுகளின் கீழ் பிரிக்கப்படுகிறது. அதன் படி, அடிப்படை சம்பளம் என்பது முதன்மைப் பிரிவு. மேலும், வீட்டு வாடகை பிரிவு, வருங்கால வைப்பு நிதி (PF), இதர படித்தொகை, மற்றும் பணிக்கொடை உள்ளிட்டவை அடங்கும்.

PF உயர்வு

மேலும், தற்போது உள்ள முறையில், மொத்த சம்பளத்தில் அடிப்படை சம்பளம் 30% முதல் 40% ஆக உள்ளது. இது புதிய ஊதியச் சட்டத்தின் கீழ் 50% ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்த அடிப்படைச் சம்பளத்தை வைத்து தான் PF தொகை கணக்கிடப்படுகிறது.

அடிப்படைச் சம்பளம் உயரும் போது, PF தொகையும் உயரும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, Take Home சம்பளம் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது (New Wage Code in Tamil).

வரிகளும் உயர்வு

மேலும், அடிப்படைச் சம்பளத்தொகை உயர்வதன் காரணமாக, வரிக்கு உட்பட்ட வருமான வரம்பும் உயரும். இதன் காரணமாக PF உடன் சேர்த்து வருமான வரித் தொகையும் உயரலாம்.

இது போன்ற ஊதிய மாறுபாட்டால், விளைவுகள் சற்று அதிகமாக இருக்கும் என எண்ணப்படுகிறது. PF அதிகரிக்கும் போதிலும், மாதந்தோறும் நாம் பெறும் ஊதியத் தொகை குறைவதால், குடும்பத்தைச் சமாளிக்க வேண்டிய நிலை சிறிது கடினமாக இருக்கும் என எண்ணப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்