Sun ,Mar 03, 2024

சென்செக்ஸ் 73,806.15
60.80sensex(0.08%)
நிஃப்டி22,378.40
39.65sensex(0.18%)
USD
81.57
Exclusive

Old Pension Scheme in Tamilnadu: மீண்டும் வருகிறது பழைய பென்சன் திட்டம்…! அரசின் அதிரடி அறிவிப்பு…! இந்தத் திட்டம் தமிழகத்திலுமா..?

Gowthami Subramani June 22, 2022 & 10:00 [IST]
Old Pension Scheme in Tamilnadu: மீண்டும் வருகிறது பழைய பென்சன் திட்டம்…! அரசின் அதிரடி அறிவிப்பு…! இந்தத் திட்டம் தமிழகத்திலுமா..?Representative Image.

Old Pension Scheme in Tamilnadu: ஊழியர்களின் பழைய ஓய்வூதியத்தைத் திட்டத்தை மீண்டும் அமலுக்குக்குக் கொண்டு வரப் போவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் அறிவிப்புக்கு ஊழியர்கள் அமோக வரவேற்பைக் கொடுத்துள்ளனர் (Old Pension Scheme in Tamilnadu).

ஊழியர்களுக்கான பென்சன்

பென்சன் என்பது நாம் முதிவடையும் காலத்தில் பெறப்போகும் தொகையாகும். மாதந்தோறும், இவ்வாறு அரசுப்பணிகளில் இருந்தவர்களுக்கு பென்சன் கிடைக்கும். இவ்வாறு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பென்சன் திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு CPS எனப்படக்கூடிய பங்களிப்பு பென்சன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர் (Old Pension Scheme in Tamilnadu Latest News).

ஏற்புடையது அல்ல

அந்த வகையில் தற்போது அமலில் இருக்கும் இந்த CPS எனப்படக்கூடிய பங்களிப்பு பென்சன் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. மேலும், இதில் இழப்புகள் அதிகம் ஏற்படுகிறது எனவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என தமிழகம் மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்தக்கோரி வலியுறுத்துகின்றன (Old Pension Scheme in Tamilnadu Latest News in Tamil).

மீண்டும் அமலுக்கு வந்த பழைய பென்சன் திட்டம்

இவ்வாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால், ஒரு சில மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் தற்போது, ஜார்க்கண்ட் மாநிலமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் படி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரன் பென்சன் திட்டத்தைப் பற்றி ட்வீட் செய்துள்ளார். ட்வீட்டில் அவர் கூறியதாவது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இப்போது நேரம் வந்து விட்டது. எனவே, ஊழியர்களின் நலனுக்காக மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்தார் (TN Old Age Pension Apply Online).

ஜார்க்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு ஊழியர்களும், பழைய ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டிலும் அமலுக்கு வருமா என எதிர்பார்க்கின்றனர். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கட்டாயம் செயல்படுத்துவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பின், தற்போது நிதிப் பற்றாக்குறை காரணத்தைக் காட்டி மறுப்பது சரியாகாது எனவும் அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் (Old Pension Scheme for Government Employees in Tamilnadu in Tamil).

ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை

அரசு ஊழியர்களின் தரப்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலிறுத்தினாலும், இதில் பலவேறு பிரச்சனைகள் இருக்கிறது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவ்வாறே, மாநில அரசுகள் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்தால், மிகப் பெரிய அளவிலான நிதி நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது (Old Pension Scheme for Government Employees in Tamilnadu 2022).

இவ்வாறு அரசு தரப்பிலும், ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்ட பிரச்சனைகளும் என்ன தீர்வை அளிக்கும் என்பதில் அதிக சந்தேகங்கள் எழுகின்றன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் மீண்டும் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விகள் வந்துள்ளன. அரசு தரப்பில் கூறப்பட்டவாறு உள்ள பிரச்சனைகள் சந்திக்கப்படுமா… ரிசர்வ் வங்கி எச்சரிக்கையின் படி, நிதி நெருக்கடி ஏற்படுமா என்ற சந்தேகங்கள் தற்போது அனைவரின் மத்தியிலும் எழுந்து வருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்