இந்தியாவில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மற்றும் ஜார்க்கன்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறி வருகின்றன.
கடந்த 2003 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பாஜக தலைமையிலான NDA அரசால் பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு மாறாக, புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் முதல் அமலுக்கு வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியம் சார்ந்த திட்டமாக இருக்கும். புதிய ஓய்வூதியத் திட்டமானது முதலீட்டு மற்றும் ஓய்வூதியத் திட்டமாக அமைகிறது.
ஓய்வுக்குப் பிறகு, ஊழியர்களுக்கு நிலையான மாத வருமானத்தை உறுதியளித்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைத்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்த நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்குக் கூட பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மத்திய குடிமைப் பணிகள் விதிகள் 2021-ன் கீழ் பணியில் இருக்கும் போது, இந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது குடும்பத்தினர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறலாம் என்ற ஒரு விருப்பம் உள்ளது. அது போல, பணியில் இருக்கும் போது அவரால் செயல்பட முடியாத அளவிற்கு ஏதேனும், உடல் நிலை கோளாறு அல்லது ஊனம் ஏற்பட்டாலும், தவிர்க்க முடியாத காரணங்களினால் அரசு ஊழியர் துறையிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என விதி கூறுகிறது.
சமீபத்தில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்க்கான நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், மத்திய குடிமைப் பணிகள் விதிகள் 2021-ன் கீழ், தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் வரக்கூடிய மத்திய அரசு ஊழியர்களின் சேவை குறித்த விஷயங்களை நிர்வகிக்க அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த விதிகளின் விதி எண் 10-ந் படி, மத்திய அரசு ஊழியர்கள் சில நிகழ்வுகளின் அடிப்படையில் தேசிய ஓய்வூதிய முறை அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கான விருப்பம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விதிகளின் எண் 10-ன் படி கீழே கொடுக்கப்பட்டவற்றைக் காண்போம்.
படிவம் 1: இந்த மத்திய குடிமைப் பணி விதிகள் விதி எண் 10 படி, NPS-ன் கீழ் உள்ள ஒவ்வொரு அரசு ஊழியரும், அரசுப் பணியில் சேர்வதற்கு NPS-ன் கீழ் பலன்களைப் பெறுவதற்கு Form-1-ல் விருப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் அல்லது மத்திய சிவில் சேவை விதிகளின் ஓய்வூதியம் மற்றும் அசாதாரண ஓய்வூதியம் விதிகளின் கீழ் ஊழியர் இறந்தால் அல்லது ஊனமுற்றல் அல்லது ஓய்வு பெற்றதன் காரணமாக பணியிலிருந்து வெளியேறும் போது இந்த விருப்பத்தைப் பயன்படுத்தலாம்.
அதே போல, ஏற்கனவே பணியில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் இந்த விருப்பத்தைப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
படிவம் 2: அதே போல, ஒவ்வொரு அரசு ஊழியரும் அவர்களது குடும்ப விவரங்களை படிவம் 2-ல் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அரசு உயரதிகாரி ஊழியரிடம் இருந்து பெறப்பட்ட அனைத்துத் தகவல் தொடர்புகளையும் ஒப்புக் கொண்டு கையொப்பமிட்டு, சம்பந்தப்பட்ட அரசு ஊழியரின் சர்வீஸ் புத்தகத்தில் ஒட்ட வேண்டும்.
இந்த ஆப்ஷனை ஊழியர்கள் அவர்களது ஓய்வுக்காலத்திற்கு முன் எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக் கொள்ளலாம். எதிர்பாராத விதமாக பணியைத் தொடர முடியாத ஊழியர்கள் புதிய ஆப்ஷனை சமர்ப்பிக்கும் விருப்பத்தைப் பெறுவர். ஊழியர் பணியில் இருக்கும் போது, அவர் இறந்தால், இறப்பதற்கு முன் அவர் கடைசியாக பயன்படுத்திய ஆப்ஷனே கடைசியாகும். இந்த ஆப்ஷனைத் திருத்த அவரது குடும்பத்தினருக்கு உரிமை இல்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…