Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Online Debt App Complaints: ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்குதலில் மோசடி…! RBI -ல் புகார் தெரிவிக்கலாமா..? முழு விளக்கம்

Gowthami Subramani June 10, 2022 & 17:00 [IST]
Online Debt App Complaints: ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்குதலில் மோசடி…! RBI -ல் புகார் தெரிவிக்கலாமா..? முழு விளக்கம்Representative Image.

Online Debt App Complaints: ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்குதலில் மோசடி ஏற்பட்டால், அதனை ரிசர்வ் வங்கியிடம் புகார் அளிக்கலாமா என்பது குறித்த விவரங்களைப் பற்றி இதில் காணலாம்.

ஆன்லைன் செயலி

பெரும்பாலும் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. ஏனெனில் இந்த அப்ளிகேஷன்கள் எளிமையான முறையின் மூலம் மக்களுக்குக் கடன்களை அளிக்கின்றன.

அதே நேரத்தில், கடனுக்கான வட்டி பலமடங்கு பெருகி வருவதாகவும், கடன் திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் தற்போது புகார்கள் எழுந்து வருகின்றன.

புகார் செய்யலாமா?

இந்நிலையில் ஆன்லைன் மூலம் கடன் அளிக்கும் செயலிகள், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யவில்லை. இதனால், ஆன்லைன் செயலியைப் பயன்படுத்துவதால் நிகழக் கூடிய பணப் பரிவர்த்தனை முறைகளைப் பற்றி ரிசர்வ் வங்கி அறியாது. இதனால், ஆன்லைன் செயலி மூலம் நடக்கும் எந்த வித பிரச்சனைக்கும் ரிசர்வ் வங்கி பொறுப்பேற்காது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்த செயலிகளில் மட்டும்

மேலும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவித்ததாவது, எந்தெந்த நிதி வழங்கும் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரங்கள் இருக்கிறது. இதனால், கடன் வாங்குவதற்கு முன்பு அதனைப் படித்த பிறகு, நம்பகத்தன்மை உள்ள நிறுவனத்தில் மட்டும் கடன் பெற்றால் எந்த பிரச்சனையும் வராது என்று தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைமில் புகார்

ஆன்லைன் செயலி மூலம் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உள்ளூர் போலீசாரிடம் அல்லது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம். மேலும், வங்கியில் பதிவு செய்த செயலி மற்றும் நிதி நிறுவனங்களின் மூலம்,  புகார்கள் இருந்தால், ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவிக்கலாம் என்றும், அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்