பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் தொடர்ந்து எந்த மாற்றமுமின்றி 140 ஆவது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த சில நாள்களாகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து 140 ஆவது நாளாக, அக்டோபர் மாதத்தின் முதல் நாளான இன்றும் பெட்ரோல் டீசல் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. அதன் படி, சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.63 ஆகவும், டீசல் விலை ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அயல் நாடுகளில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொருளாதார பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ள இந்த சூழலால், இந்தியாவில் இனி பெட்ரோல் விலை குறையாது எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…