நாம் சேமிக்க நினைக்கும் பணத்தை வங்கியில் தரலாமா இல்ல அஞ்சலகத்தில் தரலாமா என்ற சந்தேகம் இருக்கிறதா உங்களுக்கு. அப்படி பார்த்தால் அஞ்சலகம் தான் பெஸ்ட் ஆப்ஷன், ஏனெனில் வடியும் அதிகம் கூடுதலாக 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் கிடைக்கும்.
இந்த பதிவில் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் பற்றி பார்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் நாம் மாதா மாதம் பணம் செலுத்தலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். நாம் சம்பாதிக்கும் தொகையில் மாதம் ரூ.100/- முதல் எவ்ளோ வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதன் மூலம் வங்கி வட்டியின் மூலம் அதிக வருமானம் பெறலாம், ஏனெனில் வட்டி விகிதம் 5.8% கிடைக்கும்.
இதில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் போல் நம்மால் முதலீடு செய்ய முடியும். எனவே, வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் நடுத்தர மக்களும் தாராளமாக பயன் பெறலாம். ஒருவர் இந்த திட்டத்தில் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். இதனை நிர்வகிக்கும் முறையும் எளிமையாக இருப்பதால் 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட நிர்வாகிக்கலாம். இந்த திட்டத்தில் மட்டும் நீங்கள் பணம் செலுத்தி வந்தால் உங்கள் குழந்தையும் கல்விக்கான செலவு பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்.
நாம் செலுத்தும் பணத்திற்கு இந்த திட்டத்திற்கு கீழ் அதிகபட்சம் 5.8% வட்டி கொடுக்கப்படுகிறது. இப்போ நீங்கள் மாதம் ரூ.5,000/- ஸ்லேவுதி வருகிறீர்கள் என்று எடுத்துக்கொண்டால் 5 வருடத்தில் உங்களுக்கு 3 லட்சம் ரூபாய் கிடைக்கும். மேலும் வட்டியும் அதாவது உங்களின் வருமானம் ரூ. 48,740/- கிடைத்தால் மொத்தம் ரூ.3,48,740/- உங்களுக்கு கிடைக்கும்.
சரி, அப்ப இந்த திட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டின் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்தால் நமக்கு 12% வரை வட்டி கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். அப்போ நாம் மாதம் ரூ.5,000/- செலுத்தினால் 5 வருடங்களுக்கு பிறகு 3 லட்சம் முதலீடு மற்றும் வருமானம் ரூ.1,12,432/- கிடைக்கும். ஆக மொத்தம் நமக்கு ரூ.4,12,432/- கையில் தங்கும். நீங்கள் ஒருவேளை இந்த திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் உங்களுக்கு அருகில் இருக்கும் அஞ்சலகத்தில் சென்று என்ன திட்டம், எவ்ளோ முதலீடு செய்யலாம், எவ்ளோ கையில் கிடைக்கும், வட்டி எவ்ளோ இப்படி எல்லாம் விசாரித்து மேற்கொள்ளுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…